கயல் முதல் மருமகள் வரை… இன்றைய சன் டிவி டாப் சீரியல் புரோமோக்கள்…

by Akhilan |
sunserials
X

sunserials

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் 5 சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டுகளின் புரோமோ அப்டேட்டுகளின் தொகுப்புகள்.

கயல்: கயல் மற்றும் எழிலிடம் சரவண வேலு வாழ்க்கையிலேயே நாம் பயந்தநாள் அதுதான். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது என்று நான் தெரிந்துகொண்டேன் என்கிறார். பெரியப்பா கயலிடம் சென்று எல்லா உண்மையும் சொல்லி சரண்டர் ஆக போகிறேன் என்கிறார். நீங்க உண்மைய சொன்னா கயல் உங்களை விட்றுவாளா என்கிறார் பெரியம்மா. சரவணவேலு கயலிடம் உனக்கு நான் யார் என கேட்க பிரண்ட் என்கிறார். நான் உனக்கு பிரண்ட் இல்லை என சரவணன் கூறுகிறார்.

இதையும் படிங்க: சிவராஜ்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ ஜெயிலர் 2 நிலைமை?

சுந்தரி: சுந்தரி திருமணத்தில் பிரச்சனை செய்யும் கார்த்திக் அனு வராமல் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என சபதம் போடுகிறார். அப்பத்தா அவன் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும் என்கிறார். அனுவின் அம்மா சாரி சுந்தரி அனு உயிரோட தான் இருக்கா என்ற உண்மையை கூறுகிறார்.

மூன்று முடிச்சு: நந்தினி அப்பா நான் புகார் கொடுக்க முடியாது என்கிறார். போலீஸ் உங்க பொண்ணு காணாம போனதுக்கு அப்போ யார் புகார் கொடுப்பார் என கேட்க நான் கொடுக்கிறேன் என சூர்யா வந்து நிற்கிறார். போலீஸ் மினிஸ்டருக்கு கால் செய்து பேச அவர் கடத்தல் கேசை கொலை கேசாக மாற்றிவிடுகிறேன் என்கிறார். சூர்யா நந்தினி காணலைன்னு தெரிஞ்சதும் ஸ்வீட் எடுத்து கொடுத்தாங்களே அது ஒன்னு போதாதா டாடி என அருணாச்சலத்திடம் கேள்வி கேட்கிறார்.

சிங்கப் பெண்ணே: கருணாகரன் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுகிறேன் அப்போ போவீங்க என்கிறார். அன்பு நேத்து வாங்குனது மறந்து போச்சா எனக்கேட்க அங்கிருப்பவர்கள் சிரித்து விடுகின்றனர். ஆனந்தி அப்பா அவர் அம்மாவிடம் 48 நாள்ல நல்லது நடக்கலனா பெரிய அவமானம் நேருமுனு சொல்லிட்டு போய்ட்டான் என்கிறார். கருணாகரன் இவங்க ரெண்டு பேரும் இங்க இருந்தா நான் இங்கே இருக்க மாட்டேன் என்கிறார். மகேஷ் அப்போ நீங்க வேலையை விட்டுட்டு போகலாம் எனக் கூற அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

இதையும் படிங்க: Biggboss Tamil: பொண்டாட்டிக்கிட்ட கேட்டாவது வந்து இருக்கலாம் ப்ரோ… பிக்பாஸ் வீட்டுக்குள் காணாமல் போன போட்டியாளர்…

மருமகள்: ஆதிரை தன்னுடைய தோழிக்கு கால் செய்து விவாகரத்து வழக்கு இருப்பதாக அவர் அண்ணனை அழைத்து வர கூறுகிறார். இதை கேட்கும் பிரபு தன்னுடைய நண்பனுடன் வக்கீலை மடக்குவதாக நினைத்து கான்ஸ்டபிளை அடித்து காவல் நிலையத்தில் இருக்கிறார். அவரை பார்க்க வரும் ஆதிரையிடம் இதை போலீஸ்காரர் கூறுகிறார்.

Next Story