சன் டிவி டாப் 10 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்!.. மொத்த வாழ்க்கையும் மாறிப்போச்சே!..

by சிவா |
sun tv
X

சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு டாப் 10 என்கிற நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். அந்த வாரம் வெளியான திரைப்படங்களை வரிசைப்படுத்தி விமர்சனம் செய்வார்கள். முழு விமர்சனமாக இல்லாமல் 4 வரியில் நறுக்கென சொல்லி படத்திற்கு ஏற்றார் போல் 10ல் ஒரு இடம் கொடுத்திருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அப்படத்தை பார்க்க தியேட்டருக்கு போன ரசிகர்களும் அப்போது இருந்தார்கள். இந்த சேனலில் நம்பர் ஒன் இடம் ஒரு படத்திற்கு கொடுக்கப்பட்டால் அதையே படக்குழு விளம்பரமாக கூட பயன்படுத்தினார்கள். ஆனால், அதன்பின் பல டிவி சேனல்களும் இதுபோல திரை விமர்சனங்களை கொடுத்தனர். எனவே, ஒருகட்டத்தில் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: மிட் நைட்டில் சிம்பு பார்த்த வேலை!.. பதறிய நடிகர்!.. தியேட்டர்ல நடந்ததுதான் ஹைலைட்!…

அதேநேரம், இந்த நிகழ்ச்சி ஒரு படத்தை ஓட வைத்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?!. உண்மையில் அது நடந்திருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், ரம்பா, மணிவண்ணன் என பலரும் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம்தான் உள்ளத்தை அள்ளித்தா.

Ullathai allitha

Ullathai allitha

முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரசிக்கத்தக்க பாடல்களை கொண்ட திரைப்படம் இது. ஆனால், இந்த படம் முதல் வாரத்தில் தியேட்டரில் கூட்டமே இல்லை. அப்போது இப்படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த சுராஜ் சுந்தர் சியை பார்க்க அவரின் வீட்டுக்கு போயிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா!.. முண்டா பனியனில் அழகை காட்டும் காவ்யா!…

சாப்பிட்டுக்கொண்டே இருவரும் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்த போது ‘படம் ஃபுல்லா காமெடியா இருக்கு. ஒருவேளை கொஞ்சம் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்திருந்தால் கூட்டம் வந்திருக்குமா?’ என சுந்தர் சி சொல்லியிருக்கிறார். அப்போது டிவியில் டாப் 10 நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.

கண்டிப்பாக நமது படம் டாப் 5க்குள் வரும் என நினைத்து இருவரும் ஆவலாக பார்த்திருக்கிறார்கள். 5,4 என முடிந்துவிட்டது. சரி மூன்றாவதாக வரும் என நினைத்த அவர்களுக்கு பெரிய சர்ப்பரைஸ் காத்திருந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பின் தியேட்டரில் படம் பிக்கப் ஆனதாக சுராஜே ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தின் வெற்றி சுந்தர் சி, கார்த்திக், ரம்பா, மணிவண்ணன் உள்ளிட்ட பலருக்கும் பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

Next Story