தயவு செஞ்சு அரண்மனை 4 பார்க்குறதுக்கு முன்னாடி அதை மட்டும் பண்ணாதீங்க!.. அலர்ட்டான சுந்தர். சி!..

by Saranya M |   ( Updated:2024-04-03 02:24:28  )
தயவு செஞ்சு அரண்மனை 4 பார்க்குறதுக்கு முன்னாடி அதை மட்டும் பண்ணாதீங்க!.. அலர்ட்டான சுந்தர். சி!..
X

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் அந்தப் படத்தின் டிரைலர் ரிலீசான நிலையில், தொடர்ந்து நடிகை தமன்னா மட்டும் ராஷி கன்னாவுடன் இணைந்து படத்தை புரமோட் செய்து வருகிறார் சுந்தர். சி.

அரண்மனை முதல் பாகம் முதல் மூன்றாவது பாகம் வரை இயக்கி நடித்துள்ள சுந்தர். சி விரைவில் வெளியாக உள்ள நான்காம் பாகத்தில் ஹீரோவாக மாறியுள்ளார். இந்த படத்தில் தமன்னா, ராஷி கன்னா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: லிங்குசாமியை காலி செய்த கமல்!.. கை கொடுப்பாரா கார்த்தி?!.. ஐயோ பாவம் அவரு நிலமை!..

அரண்மனை 4 படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் தயவுசெய்து விமர்சனங்களை பார்த்துவிட்டு வர வேண்டாம். பொதுவாகவே தனது படங்களுக்கு விமர்சனங்கள் சாபக்கேடாக உள்ளது என்றும் சுந்தர். சி கூறியுள்ளார்.

கண்டிப்பா எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி தியேட்டருக்கு படத்தை வந்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு அரண்மனை 4 படம் பிடிக்கும். நிச்சயம் ஒவ்வொரு காட்சியையும் என்ஜாய் பண்ணி பார்ப்பீங்க.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்துலயும் சம்பவம் இருக்கு!.. லோகேஷ் கனகராஜ் சீக்ரெட்டை உடைத்த சாண்டி மாஸ்டர்!..

இது மற்ற மூன்று பாகங்களை போல பழிவாங்கும் படமாக உருவாகவில்லை. இதில் வித்தியாசமான எமோஷன் காட்சிகள் மற்றும் தரமான படைப்பு ஏகப்பட்ட உழைப்புகள் உள்ளன என சுந்தர். சியும் தமன்னாவும் கூறியுள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், ரசிகர்களுக்கு அரண்மனை 4 படத்தின் மீது பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் இல்லை. சமீபத்தில் வெளியான டிரெய்லரிலேயே படத்தின் கதை தெளிவாக தெரிந்து விட்ட நிலையில், படம் பெரிய வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தின் கதை இதுதான்… ரசிகனுக்காக ரஜினி செய்யப் போகும் தரமான சம்பவம்..

Next Story