Connect with us

Cinema History

அந்த இயக்குனர் எனக்கே விபூதி அடிச்சாரு… அதுக்கூட தெரியாம உட்கார்ந்து இருக்கேன்… சுந்தர்.சி சொன்ன பகீர் தகவல்

SundarC: இயக்குனராக இருந்த சுந்தர்.சி சில படங்களை தயாரித்து இருக்கிறார். அதை தொடர்ந்து நடிப்பில் இறங்கியவருக்கு முதல் சில படங்கள் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அதன் பின்னால் இயக்குனர் வைத்த உள் குத்து கூட தெரியாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல் படத்திலே நல்ல அங்கீகாரத்தினை பெற்றவர் நடிகர் சுந்தர்.சி. இதை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம். கமலை வைத்து அன்பே சிவம் என்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இயக்கத்தில் கொடி கட்டி பறந்தவர். ஒரு கட்டத்தில் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. நடிக்கலாம் எனவும் முடிவெடுத்தாராம்.

இதையும் படிங்க: இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..

சுராஜ் இயக்கத்தில் ஜோதிர்மயி, வடிவேலு ஆகியோருடன் இணைந்து தலைநகரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு சினிமாவில் நடிக்க தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தது. ஆனால் முதல் படம் ஒரு ரீமேக் என்பது கூட சுந்தர்.சிக்கு தெரியாமல் தான் இருந்ததாம். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, நான் கோயமுத்தூரை சேர்ந்தவன். அது கேரளாவின் பக்கம் என்பதால் அதிக மலையாள படங்களை பார்த்து இருக்கேன். அதிலும் மோகன்லால், பிரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் படங்கள் மீது எனக்கு கொள்ளை பிரியம். நிறைய படங்களை பார்த்த எனக்கே சுராஜ் விபூதி அடித்து இருக்கிறார். அது உண்மையாகவே அவர் திறமை.

இதையும் படிங்க: ஒரு பாடலில் பணிபுரிந்த நால்வருக்கும் டைவர்ஸ்… சூப்பர்ஹிட் பாட்டின் ஃபீல் பண்ண வைக்கும் ஒற்றுமை?!

அட என்னப்பா, அதான் அந்த மோகன்லால் படம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்துச்சே அபிமன்யூ என்று அவர்கள் சொல்லுவரை தலைநகரம் ரீமேக் படம் என்பதே எனக்கு தெரியவில்லை. அதிலும் பெரிய காமெடி என்றால் தலைநகரம் படத்தினை தெலுங்கில் ரைட்ஸ் வாங்கி அதை வேறு ரீமேக் செய்தார்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top