Connect with us
Sababathy

Cinema History

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காமெடி படம்… பெண்களுக்கான சூப்பர் மேட்டரையும் அப்பவே சொல்லிருக்காங்கப்பா..!

தமிழ்ப்பட உலகில் பழைய படம்னாலே ஒரே சோகமயமாகத் தான் இருக்கும்னு சொல்வார்கள். ஒரு சிலர் ‘படம்னாலே பொழுது போக்கு தான். நாம அழறதுக்கா தியேட்டருக்கு வந்துருக்கோம்… நல்ல காமெடி படமா பார்க்கலாம்’னு வருவாங்க. ஆனா, காமெடி படத்திலயும் எங்கேயாவது ஒரு மூலையில் சென்டிமென்ட் என்ற பெயரில் அழும் காட்சி வந்து விடும்.

ஆனால் இவற்றை எல்லாம் கடந்து முழுக்க காமெடியாக வந்தது ஒரு படம். அதுவும் 1941ல். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான சபாபதி தான் அந்தப் படம். இது பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகம் தான் திரைப்படமாகி உள்ளது. கதை இதுதான்.

இதையும் படிங்க… வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

பணக்காரரான மாணிக்க முதலியாருக்கு ஒரே மகன் சபாபதி. பள்ளி படிப்பில் பெயில் ஆகி விடுகிறான். பரீட்சையில் பெயில் ஆனதும் தூக்கு போடுவதை போல நடித்து அப்பாவோட கோபத்தில் இருந்து தப்பிக்கிறான் சபாபதி. அதே நேரம் அவரது வீட்டின் வேலைக்காரன் பெயரும் சபாபதி தான். இவனோ அப்பாவி. சோடா உடைத்து வா என்றால் பாட்டிலை உடைத்து எடுத்து வந்து விடுவான்.

முதலாளி சபாபதி சீட்டு கட்டு விளையாட ஆளைக் கூட்டி வா என வேலைக்காரன் சபாபதிக்கு ஆர்டர் போட, அவனோ தமிழ்வாத்தியாரை கூட்டி வந்து விடுகிறான். அப்புறம் ஒரே அலப்பறை தான்.

இதையும் படிங்க… அதுக்கு மட்டும் உங்களுக்கு டைம் இருக்கா?… அஜித்குமாரை கழுவி ஊற்றும் பிரபலம்…

அந்தக் காலத்திலேயே தமிழ் ஆசிரியரை டம்மி பீஸ் போல காட்டியுள்ளார்கள். மாணவர்கள் அவரைத் தான் கிண்டல் செய்வார்கள். அவர் வகுப்பில் தூங்குகிறார். மீசை வரைகிறான் மாணவன். அவனுக்கு பெண் பார்க்கிறார்கள். படித்த சிவகாமு கிடைக்கிறாள்.

அதே போல வேலைக்காரன் சபாபதிக்கு பெண் பார்க்கிறார்கள். அவனுக்கோ குண்டுமுத்துவை திருமணம் செய்ய நேரிடுகிறது. அவனது வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து. அவள் தூங்கும்போது தாலி கட்டி விடுகிறான். அதற்கு அடியும் வாங்குகிறான். அதற்கு ஐடியா கொடுப்பதோ முதலாளியான சபாபதி.

Sababathi2

Sababathi2

படத்தில் வேலைக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல பெண்கல்வியும் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. அந்தக்காலத்திலேயே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை எடுத்ததற்காகவே பாராட்டலாம். படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் சபாபதியாக வந்து கலக்குகிறார். காளி என்.ரத்னம் தமிழ் வாத்தியாராக வருகிறார்.

இந்தப் படத்தோட சில காட்சிகளை இப்போது யூடியூப்பில் பார்த்தாலும் நாம் மெய்மறந்து சிரித்துவிடுவோம். வாய்ப்பு கிடைத்தால் பார்த்து ரசியுங்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top