என் புருஷன் என்னோட சின்ன பையனா இருந்தா என்ன தப்பு!.. சூப்பர் சிங்கர் பாடகி சொல்றதை கேளுங்க!..

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி மாளவிகா சுந்தர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது கணவருடன் இணைந்து வந்து அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. சூப்பர் சிங்கர் மாளவிகா சுந்தர் தன்னை விட இளம் வயது நபரை திரும்ணம் செய்துக் கொண்டது அப்போது லேசான சர்ச்சையை கிளப்பியது.
சோஷியல் மீடியாவில் மாளவிகா சுந்தர் தன்னை விட சிறியவரை திருமணம் செய்து கொண்டார் என்று ஏகப்பட்ட ட்ரோல்களும் உலாவின. கடந்த 2021ம் ஆண்டு மாளவிகா சுந்தர் அஸ்வின் காஷ்யப் ரகுராமன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இதையும் படிங்க: அச்சு அசல் அப்படியே இருக்காரே! இவர் இல்லைனா தனுஷ் இல்ல – வைரலாகும் டூப் நடிகரின் புகைப்படம்
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு 32 வயதாகுது. என் கணவருக்கு 31 வயது தான் ஆகுது. மாதக் கணக்கில் வித்தியாசம் என்று பார்த்தால் வெறும் 9 மாதங்கள் தான். அவர் என்னை விட 4 வயது குறைவானவராக இருந்தாலும், நான் அவரை விட 4 வயது குறைவானவளாக இருந்தாலும் என்ன பிரச்சனை வரப் போகிறது.
மனசு ஒத்துப்போய் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தால், வயது வித்தியாசமெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஆரம்பத்தில் இதெல்லாம் செட்டாகாது, சீக்கிரமே இவ டைவர்ஸ் வாங்கிடுவா என்றெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள். ஆனால், 2 ஆண்டுகளாக நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வருகிறோம் என ஸ்டீரியோடைப்புகளை உடைத்தெறிந்திருக்கிறார் மாளவிகா சுந்தர்.
இதையும் படிங்க: விஜய்க்கும் பிரசாந்துக்கும் முட்டிக்கிச்சா!.. கோட் படத்தில் புது சிக்கல்.. பிரபலம் சொன்ன மேட்டர்!..
சூப்பர் சிங்கரில் இருந்த மாளவிகா சுந்தரா இவர் என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு அவர் ஆளே மாறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதிக வயது கொண்ட பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு பல ஆண்டுகள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.