Connect with us

Cinema History

இதெல்லாம் வேற லெவலுங்க…ஜாலியா படுத்துக்கொண்டும், குளியல் தொட்டிக்குள் உட்கார்ந்து கொண்டும் படம் பார்க்க இங்கே வாங்க….!

நம்ம ஊரில் சினிமாவை ஒரு கொட்டகைக்குள் இருந்து மணல் குவித்து பார்த்து இருப்போம். அதை டூரிங் டாக்கீஸ் என்பார்கள். அது ஒரு சுகமான அனுபவம். அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் என்றால் இப்போது எல்லாம் பெரும்பாலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளாகத் தான் உள்ளன. ஒரே காம்ப்ளக்ஸில் 5 முதல் 10 திரையரங்குகள் உள்ளன. உள்ளேயே ஷாப்பிங் செய்யலாம்.

சினிமா என்றாலே கொண்டாட்டமான அனுபவம் தான். எந்த ஒரு பங்க்ஷன்னாலும் சினிமாவுக்குப் போறதையே பொழுதுபோக்காக கொண்டு வருகிறோம். என்ன தான் வீட்டுல ஹோம் தியேட்டர்ல பார்த்தாலும், பெரிய பெரிய மொபைல்ல ஹெட்செட் போட்டு பார்த்தாலும் தியேட்டர்ல கிடைக்கற அனுபவம் வராது. அதனாலேயே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுக்கின்றனர்.

அதுவும் தற்போது புதிய புதிய தொழில்நுட்பத்தில் படம் தெளிவாகவும், சவுண்ட் சிஸ்டம் வேற லெவலிலும் வந்து கொண்டுள்ளன. இந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் தியேட்டர்களுக்கு வந்தே ஆக வேண்டும். அந்த வகையில், உலகளவில் சிறந்த திரையரங்குகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

சினி திசியோன்

cine thision

க்ரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் இந்தத் திரையரங்கம் உள்ளது. இது ஒரு அவுட்டோர் தியேட்டர். நம்ம ஊரு ட்ரைவ் இன் தியேட்டர். அதைப் போல இருக்கும். இந்தத் திரையரங்கில் பகலில் காட்சிகள் கிடையாது. இரவில் மட்டும் தான் உண்டு. அதுவும் சம்மர் சீசனில் மட்டும் தான் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இந்தத் தியேட்டர் 1935ல் இருந்தே செயல்பட்டு வருகிறது.

அலமோ ட்ராப்ட்ஹவுஸ்

இது அமெரிக்காவில் உள்ளது. இந்த்திரையரங்கில் எந்த ஒரு டிஸ்டர்பன்சும் இருக்காது. அதாவது சாதாரணமாக நாம் படம் பார்க்கும்போது சிலரின் செல்போனில் இருந்து ரிங்டோன் சவுண்டு நம்மை எரிச்சல் அடையச் செய்யும். அல்லது குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டு இருக்கும்.

இதையெல்லாம் அட்ஜஸ்ட்மன்ட் பண்ணிப் பார்த்தா தியேட்டர்ல அட்வர்டைஸ்மண்ட் போடுவாங்க. ஆனால், இந்தத் திரையரங்கைப் பொறுத்தவரையில் இதுபோன்ற எந்த இடைஞ்சல்களும் இல்லை. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. விளம்பரங்கள் போட மாட்டார்கள். இங்கு படம் பார்க்க வருபவர்களுக்கு மொபைல் போன் அனுமதி இல்லை.

ராஜ் மந்திர் தியேட்டர்

இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூரில் தான் இந்தத் தியேட்டர் உள்ளது. 1976ம் ஆண்டு முதல் இந்தத் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. 1200 இருக்கைகள் உள்ளன.

பாலிவுட் திரைப்படங்களை பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸோட பார்க்கணும்னு ஆரம்பிச்சாங்க. இந்தத் தியேட்டரோட ஆர்க்கிடெக்சர் அழகா இருக்கும். அது மட்டுமல்லாமல் படம் பார்க்க வரும் ரசிகர்களை எளிதில் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

கினோ இன்டர்நேஷனல்

இந்தத் தியேட்டர் பெர்லினில் உள்ளது. இந்தத் தியேட்டர்ல படம் மட்டுமல்லாமல், பெஸ்டிவெல், பார்ட்டிகள் என அனைத்தையும் கொண்டாடுகிறார்கள்.

இந்தத் தியேட்டர்ல பாரம்பரிய அந்தஸ்துகளைப் பராமரித்து வருகிறார்கள். அதனால இங்கு பழமை மாறாமல் அப்;படியே பார்க்க ரசிக்கும் வகையில் உள்ளது.

4 டி எக்ஸ் தியேட்டர், தென்கொரியா

இந்தத் தியேட்டர்ல 4டி, 3டி சினிமாக்களைத் தான் அதிகமாகத் திரையிடுவார்கள். இது தான் இந்தியாவின் முதல் 4டி திரையரங்கம். கொரியாவில் இந்தத் தியேட்டருக்கு 14 கிளைகள் உள்ளன.

ஹாட் டப் சினிமா

hot tup theatre

இந்தத் தியேட்டர் நிறைய நாடுகளில் உள்ளது. குளியல் தொட்டிகளுக்குள் அமர்ந்தவாறு சினிமாவை ரசித்துப் பார்க்கலாம். இது ஒரு டப் வடிவில் இருக்கும்.

இந்தத் தொட்டிக்குள் ஹாட் வாட்டர் (வெந்நீர்) வைக்கப்பட்டு இருக்கும். இதற்குள் உட்கார்ந்தவாறு தான் நாம் படம் பார்ப்போம். இந்தத் தொட்டிகள் சம்மர் டைம்ல தியேட்டருக்கு வெளியேவும், வின்டர் டைம்ல தியேட்டருக்கு உள்ளேயும் வைக்கப்பட்டு இருக்கும்.

சினி டி சீஃப்

இந்தத் தியேட்டரும் தென்கொரியாவில் தான் இருக்கு. நாம் தியேட்டர்ல ஒரு ஆடம்பரமான அனுபவத்தோட சினிமாவைப் பார்க்கணும்னா இந்தத் தியேட்டருக்குப் போகலாம். படுத்துக்கிட்டேப் படம் பார்க்கலாம். சாப்பிட்டுக்கிட்டே ரிலாக்ஸா படம் பார்க்கலாம்.

சீக்ரெட் சினிமா

இந்தத் தியேட்டரும் உலகளவில் நிறைய நாடுகளில் உள்ளன. நம்ம படம் பார்க்கற இடத்தை சீக்ரெட்டா வைச்சிருப்பாங்க. ஒவ்வொரு தடவையும் வேற வேற இடத்தை மாத்திக்கிட்டே இருப்பாங்க. அது தான் இந்தத் தியேட்டரோட ஸ்பெஷாலிட்டி.

கேஸ்ட்ரோ தியேட்டர்

castro theatre

இந்தத் தியேட்டர் அமெரிக்காவில் உள்ளது. இந்தத் தியேட்டரை எல்லாரும் மூவி பேலஸ்னு சொல்வாங்க. இந்தத் தியேட்டர் பார்க்க அரண்மனை மாதிரி இருக்குங்கறதால தான் இப்படி சொல்றாங்க. இந்தத் தியேட்டர் 1922லயே திறந்து விட்டனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top