கே.ஜி.எப்-2 செம.! புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்.! பீஸ்ட் உங்க கண்ணனுக்கு தெரியலையா.?!
கடந்த ஏப்ரல் 13ம் தேதி தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், vtv கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. டிரைலரில் காண்பிக்கப்பட்ட ஆக்சன் திரைப்படமாக பீஸ்ட் இல்லை என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் அடுத்த நாள் ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் தற்போது ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பீஸ்ட் திரைப்படத்தை அண்மையில் பார்த்துள்ளாராம். இந்த தகவல் நேற்று முன் தினம் வெளியானது. பார்த்துவிட்டு சில நேரம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்று விட்டாராம். ஏனென்றால் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தான் சூப்பர் ஸ்டார் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிஸ்ட் பற்றி சூப்பர்ஸ்டார் புகழ்ந்ததாக தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்களேன் - தமிழ் சினிமா தரம் கெட்டு போனதற்கு காரணமே விஜய், அஜித் தான் .! மேடையில் கொந்தளித்த சூப்பர் ஹிட் ஹீரோ.!
ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, ரஜினிகாந்த் கேஜிஎப் 2 திரைப்படத்தை பார்த்துள்ளராம். பார்த்துவிட்டு வியந்து கேஜிஎப் பட தயாரிப்பாளர் விஜய் கிரகண்டர் அவருக்கு போன் செய்து படத்தில்தான் வியந்த கே.ஜி.எப் 2 பற்றி குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.