எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…

by Akhilan |
எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…
X

Priyanka_Manimegalai

Manimegalai: குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலைக்கு தொடர்ந்து ஆதரவு குவிந்து வரும் நிலையில் தற்போது பிரியங்கா தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களை கொண்டது என்னவோ குக் வித் கோமாளி தான். ஆனால் இந்த சீசனுக்கு நிறைய நெகட்டிவிட்டி குவிந்து வருகிறது. விஜய் டிவியில் இருந்து மீடியா மேசன் நிகழ்ச்சி வெளியேறிய பின்னர் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் நிகழ்ச்சிக்குள் வந்தது.

முதலில் நிகழ்ச்சியின் முக்கிய தூணாக இருந்த வெங்கடேஷ் பட் வெளியேறினார். தொடர்ந்து, ஒரிரு வாரங்கள் நிகழ்ச்சி தொடங்கியதும் சரியான காட்சிகள் இல்லை எனக் கூறி நாஞ்சில் விஜயன் இனிமேல் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எதிலும் கலந்துக்க மாட்டேன் என ஓபனாக பேசி இருந்தார்.

இதையும் படிங்க: இவருக்கு இல்லப்பா எண்ட்! பொன்விழா ஆண்டில் டபுள் ட்ரீட் கொடுக்க தயாரான ரஜினி

இதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் தேவையே இல்லாத கண்டென்ட்கள் அதிகம் இடம்பெற்றது. கோமாளிகள் நிறைய நெகட்டிவிட்டியை பரப்பினர். இது தொடர்ந்தது. விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி பிரியங்கா உள்ளே வந்த பின்னர் ஓவராக அடக்குமுறை செய்தார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் என்னுடைய நிகழ்ச்சியில் ஆங்கராக என் வேலையை செய்ய விடவில்லை.

Manimegalai

இன்னொரு ஆங்கராக வந்த குக் என் வேலையில் நிறைய தலையீடு செய்கிறார். நான் வேலை செய்த இடம் இல்லை. இங்கு அடக்குமுறை மற்றும் நெகட்டிவிட்டி தான் நிறைய இருப்பதாக நேற்று பதிவிட்டு அதிர்ச்சி அளித்தார். அவர் சொல்வது விஜே பிரியங்காவை தான் என நேரடியாகவே தெரிந்தது. இதனை தொடர்ந்து யூட்யூபிலும் மணிமேகலை வீடியோ பதிவிட விஷயம் பற்றிக்கொண்டது.

மணிமேகலைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பிரியங்கா விமர்சிக்கப்பட்டு வருகிறார். விஜய் டிவி ஓரவஞ்சனை செய்வதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தன்னுடைய கேரக்டரை பிக்பாஸில் கெடுத்து கொண்டது போல மீண்டும் குக் வித் கோமாளியிலும் அதே நிலைக்கு பிரியங்கா தள்ளப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் தரப்பு எதுவும் பதில் சொல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: தனுஷ் நல்லவரு தா… ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல… இது உலக மகா நடிப்பா இருக்கே…!

Next Story