Cinema News
எம்ஜிஆர் இருக்கும் போதே வந்திருக்கலாமே! மிஸ் பண்ணிட்டீயே.. கேப்டனை பார்த்து ஜானகி சொன்ன விஷயம்
Actor Vijayakanth: இன்று தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டு சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அவரின் மறைவை இன்று வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல நல்ல நல்ல மனிதர்களைத்தான் ஆண்டவன் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான் என பல பதிவுகளை விஜயகாந்த் மறைவின் போது பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து மூன்று ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அரவிந்த ராஜ் விஜயகாந்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். விஜயகாந்தை வைத்து கருப்பு நிலா, ஊமை விழிகள்,உழவன் மகன் போன்ற படங்களை எடுத்தவர் அரவிந்த ராஜ்.
இதையும் படிங்க: ச்சீ.. கருமம்.. ஆசனம் பேரே ஒரு மாதிரி இருக்கே!.. அமலா போல் உட்கார்ந்து இருக்க போஸை பார்த்தீங்களா!..
உழவன் மகன் படத்தின் போது விஜயகாந்துக்கு பிறந்த நாள் வந்ததாம். அதனால் வழக்கம் போல சாப்பாடு போடுவது போன்ற மாதிரியான உதவிகள் செய்யாமல் ஊன முற்றவர்களுக்காக உதவி செய்யலாம் என நினைத்து எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்றாராம் கேப்டன்.
அப்போது எம்ஜிஆர் மறைந்த நேரம். ஜானகி மட்டும் இருந்தாராம். கேப்டன் வருவதை அறிந்த ஜானகி வெளியே வந்தாராம். விஜயகாந்திடம் ஜானகி ‘ நீங்கள் ஒரு பாட்டுல வண்டியை ஓட்டிக்கிட்டே வருவீங்க. பின்னாடி சில வண்டிகளும் வரும். அத பார்த்து எம்ஜிஆர் இந்த தம்பி என்ன மாதிரியே கட்டுமஸ்தான உடம்ப வச்சிருக்காரு. நல்லா நடிக்கிறாரு’ என சொன்னதாக’ ஜானகி கூறினாராம்.
இதையும் படிங்க: ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் இருக்கும் போதே நீங்கள் வந்திருந்தால் தன்னுடைய வாரிசு என்றே எம்ஜிஆர் உங்களை சொல்லியிருப்பார் என்று ஜானகி சொன்னதும் விஜயகாந்த் வாயடைத்து நின்றுவிட்டாராம்.
பின் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என ஜானகி கேட்க, பிரச்சாரத்திற்காக எம்ஜிஆர் பயன்படுத்திய அந்த வண்டிதான் வேண்டும் என விஜயகாந்த் கேட்டு அந்த வண்டியை வாங்கினாராம். இதை அரவிந்தன் கண்ணீர் மல்க கூறினார்.