இளையராஜாவுக்கு தனுஷ்னா ரஜினிக்கு இவர்தான்!.. ரெடியாகுமா சூப்பர் ஸ்டாரின் பயோபிக்?

by Rohini |
dhanush
X

dhanush

Actor Rajinikanth: இன்று பல பேரின் மனதை கொள்ளை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய ஸ்டைல், அவரின் வேகம் , சுறு சுறுப்பு என அனைத்தும் எல்லா தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. 72 வயதை கடந்தாலும் இன்னும் அதே உத்வேகத்துடன் இந்த சினிமா துறையில் பயணித்து வருகிறார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராகவும் இருந்து வருகிறார்.

ரஜினியின் வாழ்க்கை சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் ஏகப்பட்ட கரடு முரடான பாதைகளை கடந்துதான் வந்திருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் சாதனை படைத்த ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்தை படமாக எடுக்கும் முனைப்பில் பல இயக்குனர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒரு பயோபிக் என்றால் அதில் சுவாரஸ்யங்கள் நிறைந்த பல்வேறு விஷயங்கள் இருந்தாக வேண்டும்.

இதையும் படிங்க: சரியான பேராசை புடிச்ச சுயநலவாதி வடிவேலு!.. கூட இருக்குறவங்களுக்கு சம்பளமா இதைத்தான் தருவாரா?..

அப்போதுதான் அதை படமாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் தயாராகப் போகிறது. அதில் இளையராஜாவாக தனுஷ் இருக்கிறார். அதற்கான கதை விவாதத்தில்தான் இப்போது அந்த கூட்டணி ஈடுபட்டு வருகிறது. இளையராஜாவின் வாழ்க்கையிலும் பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கிறது.

அதை வெளிப்படையாக காட்டினால்தான் படமும் சுவாரஸ்யமாக இருக்கும். அதே போல் ஸ்ரீதேவியின் பயோபிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்க அவருடைய கணவரான போனிகபூர் அதை மறுத்துவிட்டார். ஸ்ரீதேவி எப்பொழுதுமே ஒரு ப்ரைவேட் பர்ஷனாகவே வாழ்ந்தார். அதனால் அவருடைய பயோபிக்கை நான் இருக்கும் வரை எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: விஜயின் கடைசி நாயகி இவர் தானா.. தளபதி69 திரைப்படத்தில் மீண்டும் அந்த நடிகையா?

அதை போலத்தான் ரஜினியின் பயோபிக்கையும் தாராளமாக எடுக்கலாம். இதை பற்றி சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் ‘ரஜினியின் பயோபிக்கை எடுத்தால் அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘கண்டிப்பாக தனுஷ்தான் பொருத்தமாக இருப்பார். ஆனால் அவர் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதால் மீண்டும் ரஜினியின் பயோபிக்கிற்கு செட்டாக மாட்டார்’

‘தனுஷுக்கு அடுத்தபடியாக எடுத்துக் கொண்டால் விஜய் சேதுபதி நடித்தால்தான் நன்றாக இருக்கும். ரஜினியின் பயோபிக் வருவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபு படமே வேண்டாம்னு சொன்ன ரியல் கோட் ராமராஜன் தான்!.. என்ன மேட்டருன்னு தெரியுமா?..

Next Story