‘ஜெயிலர்’லாம் தூசு! அந்தப் படம் மட்டும் வெளிவந்திருந்தால் நெல்சனின் ரேஞ்சே வேற – இப்ப கூட வாய்ப்பிருக்கு

Published on: November 10, 2023
nelson
---Advertisement---

Director Nelson: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார் நெல்சன். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இந்த திரையுலகுக்கு அடியெடுத்து வைத்த நெல்சன் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இயக்குனராக  மாறினார்.

அந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற அட்டகாசமான டார்க் காமெடி படத்தை கொடுத்து அனைவரையும் கொண்டாட வைத்தார். இப்படியும் நகைச்சுவை பண்ணமுடியுமா? என்ற அளவுக்கு யோசிக்க வைத்தார்.

இதையும் படிங்க: தன் பாட்டை தானே நம்பாத இசைப்புயல்!.. ஆனா இப்ப வரைக்கும் அவரோட பெஸ்ட்ல இது ஒன்னு!..

காலங்காலமாக இருந்த நகைச்சுவை காட்சிகளில் கொஞ்சம் புதுமையை புகுத்தி டார்க் காமெடி என்ற ஒரு கான்செப்டை அறிமுகப்படுத்தினார் நெல்சன். இந்த இரு படங்களின் தொடர் வெற்றி விஜயை வைத்தும் இயக்க வாய்ப்பு கிடைத்தது.

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று நெல்சனை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். இருந்தாலும் நான் இருக்கிறேன் என உதவிக்கு கை கொடுத்தார் ரஜினி. ஜெயிலர் என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்து அனைவரின் பார்வையையும் தன் மீது படும் படி செய்தார் நெல்சன்.

இதையும் படிங்க: என்னது மாயா உண்மையிலேயே அப்படித்தானா? லோகேஷ் கொடுத்த டிவிஸ்ட் – இத நாங்க எப்படி எடுத்துக்கிறது?

இந்த நிலையில் பிரபல பாடகரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் ஒரு பேட்டியில் நெல்சனை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். அதாவது கோலமாவு கோகிலா படத்திற்கு முன்பே நெல்சன் சிம்புவை வைத்து வேட்டையன் என்ற ஒரு படத்தை எடுத்தார்.

அந்தப் படம் வெளிவந்திருந்தால் நெல்சனின் பெயர் இன்னும் உச்சத்திற்கும் சென்றிருக்கும் என அருண்ராஜா காமராஜ் கூறினார். 60 நாள்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம். இப்பக் கூட அந்தப் படம் ரிலீஸானால் நல்ல ஒரு வரவேற்பை பெறும் என்றும் படத்தின் முதல் பாதி முடிந்திருக்கிறது. இரண்டாம் பாதிதான் எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!…