துவண்ட போது நம்பிக்கை கொடுத்த அந்த நபர்!. தேடி கண்டுபிடித்து அஜித் செய்த சம்பவம்!...
Ajith kumar: சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த துறையில் இருப்பவர்கள் கொடுக்கும் நம்பிக்கை மிகவும் முக்கியம். பல பெரிய ஹீரோக்கள் உருவானதற்கு பின்னால் உழைப்பு மட்டுமல்ல. பலர் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் இருக்கும்.
சில நடிகர்கள் அவமானங்களை சந்தித்து ‘நாம் சாதித்து காட்ட வேண்டும்’ என்கிற வெறியில் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜயகாந்த், விஜய் என பலரையும் அப்படி சொல்ல முடியும். சினிமாவில் வெற்றி பெற்ற எல்லோரின் பின்னணியிலும் பல அவமானங்கள் இருக்கிறது.
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். ‘அட அழகாக இருக்கிறாரே’ என ரசிகர்களை கவர்ந்தார். சாக்லேட் பாய் முகம் என்பதால் தொடர்ந்து காதல் படங்களில் நடித்தார். பல படங்களில் வேறு நடிகர்களுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக கூட நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எஸ்.கே.வுக்காக கமல் எடுக்கும் பெரிய ரிஸ்க்!.. எங்க போய் முடியுமோ தெரியலயே!..
விஜயுடன் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்திருந்தார். விக்ரமுடன் ‘உல்லாசம்’ படத்தில் நடித்திருந்தார். நேருக்கு பேர் படத்தில் விஜயுடன் மீண்டும் நடித்தார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகவே சூர்யா அதில் அறிமுகமானார். துவக்கத்தில் ‘நாமும் ஒரு பெரிய நடிகராக மாட்டோமா?’ என்கிற ஏக்கம் அஜித்துக்கு இருந்தது.
பிரசாந்த் நடிப்பில் கல்லூரி வாசல் என்கிற படம் உருவானபோது அதில் இரண்டாவது ஹீரோவாக அஜித் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது பல ரசிகர், ரசிகைகள் பிரசாந்திடம் ஆட்டோகிராப் வாங்க, அஜித் ஓரமாக அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாராம்.
அப்போது அப்படத்தில் வேலை செய்த ஒருவர் அஜித்திடம் சென்று ‘ஏன் இப்படி ஓரமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்?.. உங்களிடம் யாரும் ஆட்டோகிராப் வாங்கவில்லையா?’ என கேட்க ‘பிரசாந்த் பெரிய ஸ்டார். நான் செகண்ட் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறேன். என்னிடம் யார் ஆட்டோகிராப் வாங்குவார்கள்?’ என அஜித் சோகமாக சொல்லி இருக்கிறார்.
அதைக்கேட்ட அந்த நபர் ‘ஃபீல் பண்ணாதீங்க தம்பி.. கண்டிப்பா நீங்களும் இன்னும் சில வருஷங்களில் பெரிய ஹீரோ ஆவீங்க. உங்களுக்கும் ரசிகர்கள் உருவாவார்கள். உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள்’ என நம்பிக்கையாக பேசியிருக்கிறார். அதன்பின் ஆசை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் அஜித். அதன்பின் தனக்கு நம்பிக்கை சொன்ன அந்த நபரை தேடிக்கண்டுபிடித்து தன்னிடமே மேனேஜராக வைத்துகொண்டாராம். அவர்தான் அஜித்திடம் பல வருடங்களாக மேனேஜராக இருக்கும் சுரேஷ் சந்திரா என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
இதையும் படிங்க: சஸ்பென்ஸ் இல்லாமலே சாவு… கோட் படத்தின் மீது ரஜினிக்கு இவ்வளவோ வன்மமா?