டைட்டில் தொடங்கி படத்தின் ரிலீஸ் வரை!.. சூர்யா 44-க்கு சுடச்சுட அப்டேட் கொடுத்த கார்த்தி சுப்புராஜ்!...

 
கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கி வரும் சூர்யா 44 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை கூறியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், மகான், ஆக்சன் உள்ளிட்ட கேங்ஸ்டர் திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து சூர்யா 44 என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் தான் என்று கூறும் அளவிற்கு படத்தின் போஸ்டர்கள் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. இதையும் படிங்க:  நாங்க பலியாடு ஆக முடியாது… சூர்யாவின் பாலிவுட் எண்ட்ரிக்கு பெரிய தடா!.. ஆனால் சமீப நாட்களாக வரும் தகவல் படி இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். அவரும் சமீபத்தில் இந்த தகவலை உறுதி செய்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை சூர்யா 44 படம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார் பூஜா ஹெக்டே. இது யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயமாக இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். சூர்யா 44 திரைப்படம் ஏறத்தாழ இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் செய்தியாளர் சூர்யா 44 திரைப்படம் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சூர்யா ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வருடம் சம்மரில் சூர்யா 44 திரைப்படம் வெளியாகும். இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. அனேகமாக டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்து இருக்கின்றார். இப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் எனவும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதையும் படிங்க:  என்னய்யா ‘அக்யூஸ்ட்’ மாதிரி நிக்க வச்சுருக்கீங்க?!… லோகி, அனிருத் நிலைமைய பாருங்க!… இந்த செய்தி தற்போது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதற்கு காரணம் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததுதான். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் சூர்யாவிற்கு அடுத்த திரைப்படமாவது வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
ramya suresh
ramya suresh

1224 Articles

From Around the web