More
Categories: Cinema News latest news

அஜித்தை போல சொகுசு கண்ட பூனையாக மாறிய சூர்யா!.. சுதா கொங்கரா, வெற்றிமாறன் நிலைமை அவ்ளோதான் போல!..

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று சூப்பராக இருந்தாலும் விருதுகளை குவித்தாலும் ஓடிடியில் வெளியானதால் பாக்ஸ் ஆபிஸில் பந்தயம் அடிக்க முடியவில்லை. அதே போல தா.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் ஓடிடி ரிலீஸ் என்பதால் சூர்யாவுக்கு பெரியளவில் மார்க்கெட் உயரவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜை நம்பி செய்த சூர்யாவை வச்சு செய்து விட்டார் இயக்குநர் பாண்டிராஜ். அதே போல பாலா படமும் தனக்கு தோல்வி படமாக மாறிவிடும் என்கிற பயத்தால் பாதியிலே ஓடி வந்து விட்டார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணினு சொன்னதும் அஜித்திடம் இருந்து வந்த கால்! வெங்கட் பிரபு பகிர்ந்த சீக்ரெட்

அஜித்தை போல சிக்கிய சூர்யா: 

கடைசியில் சாய் சாய் என சொல்லியே அஜித்தின் 4 படங்களை வரிசையாக இயக்கிய சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் இணைவாரா அல்லது பல வருடங்களாக ஆரம்பித்தும் ஆரம்பிக்காமலும் இருக்கும் வாடிவாசல் பக்கம் போய் முரட்டுக்காளைகளுடன் சண்டை போடுவாரா என பார்த்தால், அஜித்தை போலவே சிறுத்தை சிவா இயக்கத்திலேயே சூர்யா சொகுசாக செட்டிலாகி விட்டார் என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கங்குவா திரைப்படத்தின் க்ளிம்ஸ் வெளியான நிலையில், அதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக அந்த படத்தையே 2 பாகங்களாக உருவாக்கும் திட்டத்தில் சூர்யா இறங்கி விட்டாராம். ஏற்கனவே எடுத்த காட்சிகளுடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் நாட்கள் ஷூட்டிங் நடத்தினால் படத்தை 2 பாகங்களாக வெளியிட்டு பொன்னியின் செல்வன் வசூல் வேட்டை நடத்தியது போல பெரிய வசூலை வாரிக் குவித்து விடலாம் என்கிற ஐடியாவில் சூர்யா இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு செகண்ட்ல உயிரே போயிடுச்சு!.. ஐஸ்வர்யா ராஜேஷை அல்லு கிளம்ப வைத்த சம்பவம்!.. யாரு காரணம் தெரியுமா?..

சுதா கொங்கரா, வெற்றிமாறனுக்கு டாட்டா: 

சுதா கொங்கரா படத்துக்கு போனாலும் மறுபடி அவர் பெண்டு நிமிர்த்தி விடுவார், அதே போல வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு போனாலும் திரும்பி வர எத்தனை வருஷங்கள் ஆகும் என்றே தெரியாத நிலையில், இப்போதைக்கு சிறுத்தை சிவா செட்டிலேயே செட்டிலாக முடிவெடுத்து விட்டார் என்கின்றனர்.

இந்த 2 படம் மட்டும் தானா அல்லது அஜித்தை போல மொத்தமாக 4 படத்துக்கு பிறகு தான் சிறுத்தை சிவா சூர்யாவை விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ஹோட்டல் குருவில் நடிகையுடன் ரூம் போட்ட ரஜினி!… எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்!.. அப்புறம் தான் சம்பவம்!..

Published by
Saranya M

Recent Posts