நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா. சிவக்குமார் குடும்பத்திலிருந்து கார்த்தி சினிமாவில் நடிக்க வந்த போது அவர் முதலில் அறிமுகமான பருத்திவீரன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் ஞானவேல் ராஜா. ஆனால் படம் பாதி முடிந்த நிலையில் பட்ஜெட் தாண்டிப்போனதால் அப்படத்தை இயக்குனர் அமீரிடம் ‘நீங்களே படத்தை தயாரிங்கள்’ என்று ஞானவேல் ராஜா சொல்ல, அமீரும் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து முடித்தார்.
ஆனால் படத்தைப் பார்த்த ஞானவேல் ராஜா ‘படத்தை எனக்கு எழுதி கொடுத்து விடுங்கள். நீங்கள் செலவு செய்த பணத்தை கொடுத்து விடுகிறேன்’ என்று சொல்ல அமீரும் ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது வரை அந்த பணத்தை அமீருக்கு ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை.
இதைத்தான் அமீர் புகாராக சொன்னார். பருத்திவீரன் படம் ஹிட்டு அடிக்கவே தொடர்ந்து சூர்யா, கார்த்தி இருவரையும் மாறி மாறி வைத்து படங்களை தயாரித்தார் ஞானவேல் ராஜா. அதில் சில படங்கள் கையை கடித்தாலும் சில படங்கள் அவர்கள் லாபத்தை கொடுத்தது.
சூர்யாவை வைத்து கங்குவா படத்தை தயாரித்த போது அந்த படத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்தார் ஞானவேல் ராஜா. இந்த படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்றெல்லாம் அடித்து விட்டார். ஆனால் படம் பப்படம் ஆனது. இந்த படம் அவரை 200 கோடி கடனாளியாக மாற்றியது. கார்த்தியை வைத்து ஞானவேல் ராஜா தயாரித்துள்ள வா வாத்தியார் பட விழாவில் பேசிய ஞானவேல் ராஜா தமிழ் சினிமாவில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான் என சொல்லியிருந்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
நடிகர் சூர்யா ஒரு பெரிய தொழிலதிபரிடம் 200 கோடி கடன் வாங்கி அதை ஞானவேல்ராஜவிடம் கொடுத்து எல்லா கடன்களையும் அடைக்க உதவி செய்திருக்கிறார். அதோடு சூர்யா தற்போது நடித்துவரும் திரைப்படம் மற்றும் அது இல்லாமல் இன்னும் 5 படங்களில் திரைப்படங்களில் நடித்து அந்த படத்தில் வரும் லாபங்களை வைத்து அந்த 200 கோடி கடனை அடைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா.
சிவகார்த்திகேயன் இப்படித்தான் சினிமாவில் வளரும் போது சொந்த தயாரிப்பில் படங்களை எடுத்து கையை சுட்டு 100 கோடி கடனாளியாக மாறினார். அதன்பின் அவரின் ஒவ்வொரு படமும் ரிலீஸாகும் போதும் பஞ்சாயத்து வந்து மேடையில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்ட கதையெல்லாம் நடந்தது. ஞானவேல் ராஜாவுக்காக ரிஸ்க் எடுத்து சூர்யாவும் சிக்கலில் மாட்டிக்கொள்வாரா என்கிற கவலை அவரின் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.