விஜயை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சூர்யா.! இருந்தாலும் மெர்சல் அளவுக்கு வர முடியாது.!

by Manikandan |
விஜயை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சூர்யா.! இருந்தாலும் மெர்சல் அளவுக்கு வர முடியாது.!
X

முதலில் தமிழ் சினிமாவில் கமல் திரைப்படங்கள் மட்டுமே சர்ச்சைக்கு உள்ளாகும். அவர் எடுத்து கூறும் கருத்துக்கள் பல சமயங்களில் விவாத பொருளாக மாறிவிடும். அதனால் அவர் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் உண்டாகும். அதுவே அவர் படத்துக்கு விளம்பரமாக அமைந்ததுவிடும்.

அதன்பிறகு தளபதி விஜய் திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகும். அதாவது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஏதேனும் வசனம் காட்சிகள் அமைந்திருக்கும். அதன் காரணமாக சம்பந்தப்பட்ட கட்சிகள் அதற்கு எதிராக குரல் கொடுக்கும். அதன் காரணமாக படத்திற்கு விளம்பரம் அதிகரிக்கும். இல்லையென்றால் கதை திருட்டு போன்ற பிரச்சினை உண்டாகும் அது படத்திற்கு விளம்பரம் போல ஆகிவிடும்.

அப்படித்தான் மெர்சல் திரைப்படம் மத்திய அரசுக்கு எதிரான பல்வேறு வசனங்களை கொண்டிருந்தது. அதன் காரணமாக மத்திய அரசு சம்பந்தப்பட்டவர்கள் அப்படத்தை எதிர்த்து பேச அது படத்திற்கு விளம்பரமாக அமைந்து படம் மெகா ஹிட் ஆனது.

இதையும் படியுங்களேன் - ஷாலினிக்கு முன்னர் அஜித் காதலித்த பெண் பற்றி தெரியுமா.?! அவரே போட்டுடைத்த உண்மை.!

தற்போது அதே பாணியை நடிகர் சூர்யாவும் பின்பற்றுகிறாரோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அவர் நடிப்பில் கடைசியாக ஜெய்பீம் எனும் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது. அதில் சில குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான கருத்துக்கள், காட்சிகள் இருப்பதாக கூறி அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த படத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் சூர்யாவின் அடுத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகது என கூறும் அளவிற்கு பிரச்சனை பெரிது செய்தனர்.

தற்போது சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. அதனை குறிப்பிட்டு ஜெய் பீம் படத்தை எதிர்த்த அந்த குரூப் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சில ஏரியாக்களில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட கூடாது என்பது போல வெளியிட்டுள்ளனர். மேலும், சூர்யாவின் அடுத்து அடுத்து வரும் படங்களையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இலவச விளம்பரம் போல மாறி வருகிறது. இந்த அறிக்கை அதிகமாக இணையத்தில் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி பலரால் பகிரபட்டு வருகிறது. திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பாருங்கள் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் மெர்சல் அளவுக்கு பெரிய ஹிட் கொடுக்குமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Next Story