கங்குவா படத்தின் டீசர் நாளை வெளியாகிறது என்கிற அப்டேட்டை காரில் இருந்து இறங்கியதுமே கொடுத்த சூர்யா அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற Women in Stem விழாவில் கலந்து கொண்டு பெண்களின் சிறப்புகளையும் சாதனைகளையும் பெண்கள் மத்தியில் பேசி கைதட்டல்களை அள்ளி உள்ளார்.
மனைவி ஜோதிகாவின் ஷைத்தான் படத்தின் ரிலீஸுக்காக மும்பையில் இருந்த சூர்யா கங்குவா படத்தின் டீசர் ரிலீஸுக்காக மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். சென்னையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செம மாஸ் ஸ்பீச் கொடுத்துள்ளார் சூர்யா.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக காணாமல் போகும் லைகா படத்தின் ஹார்ட்டிஸ்க்… அம்மணிய தப்பா பேசிட்டாங்களேயப்பா…!
’உன்னை நினைத்து’ படத்தில் “பொம்பளைங்க காதலைத்தான் நம்பி விடாதே” பாடல் மிகப்பெரிய அளவில் சூப் சாங்காக ஹிட் அடித்தது. அந்த பாடலின் கடைசியில் “பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லைங்க” என பாடி சினேகாவின் காதலை உஷார் செய்து விடுவார் சூர்யா.
அதே போல இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலாவுக்கு முதன் முதலாக போனது நீல் ஆம்ஸ்ட்ராங் எனும் ஒரு ஆண் என்றாலும் அவரை நிலவுக்கு அனுப்ப இங்கே இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்த சாஃப்ட்வேரை உருவாக்கியதே ஒரு பெண் விஞ்ஞானி தான் என்றும் ஏர்லைன் புக்கிங், சோலார் ஹீட்டிங் சிஸ்டம், ஸ்டெம் செல், மெடிக்கல் சிரஞ்சுகள், லேசர் கான்ட்ராக்ட் சர்ஜரி, பீர், டயாபர், கார் வைப்பர், வீடியோ கால், வைஃபை என பல விஷயங்களை செய்தது பெண்கள் தான் என சூர்யா பேச பேச கைதட்டல் சத்தம் காதை கிழித்தது.
இதையும் படிங்க: என்னது!.. சின்னி ஜெயந்த் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா?!.. அட ஆச்சரியமா இருக்கே!..
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…