உலகநாயகன் இடத்தை சூர்யாவால் தான் தொட முடியும்.! மெகா ஹிட் இயக்குனரின் ஒரே சாய்ஸ்.!
தனது நடிப்பால், இயக்கத்தால், எழுத்தால் என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தனது முத்திரையை பலமாக பதித்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் 10 கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தசாவதாரம்.
இந்த படத்தை எழுதி இருந்தவர் கமல்ஹாசன். இந்த படத்தை இயக்கியிருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் தனது திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவரிடம் தசாவதாரம் படத்தில் தற்சமயம் யார் நடித்தால் சரியாக இருக்கும் என கேட்கப்பட்டது.
அப்போது அவர் சற்றும் யோசிக்காமல் சூர்யாவை தேர்ந்தெடுத்தார். கமலுக்கு அடுத்தபடியாக தனது கதாபாத்திரம் சிறப்பாக அமையவேண்டும் என கடுமையாக உழைப்பவர் தமிழ் சினிமாவில் சூர்யா தான். தசாவதாரம் போன்ற படத்தில் சூர்யா தான் தற்போதைய காலகட்டத்தில் சரியாக இருப்பார் என கூறி வியக்கவைத்தார்.
சூர்யாவும் அதற்கு சற்றும் சளைத்தவர் அல்ல, அவரால் அயன், ஆதவன் போன்ற பக்கா கமர்ஷியல் படங்களை கொடுத்ததும் சூப்பர் ஹிட் கொடுக்க முடியும். சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற தன் நடிப்புக்கு தீனி போடும் சென்சேஷனல் ஹிட்களையும் கொடுக்க கூடிய வல்லமை கொண்டவர்.