நெருப்பில்லாமல் புகையுமா? வாடிவாசலில் இருக்கும் பிரச்சினை.. சூர்யாவிடம் மல்லுக்கு நிற்கும் தாணு
Surya 44: யாரும் எதிர்பாராமல் வெளியானது சூர்யா 44 பட அப்டேட். அதுவரை கார்த்திக் சுப்பாராஜ் தனுஷ் அல்லது விஜயை வைத்துதான் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இது லிஸ்ட்லயே இல்லை என்று சொல்லுமளவுக்கு திடீரென சூர்யா கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் சூர்யா 44 படம் என்று வெளியானதும் அனைவருக்கும் அதிர்ச்சி.
அதுவரை ஒரு கண்டண்ட் ஓரியண்டட் படங்களாகவே நடித்து வந்த சூர்யா இப்போது கமெர்சியல் கதையில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை விஜயின் இடத்தை பிடிப்பதற்காகவா என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் இந்த அதிரடி அறிவிப்பு என்று விசாரித்ததில் கோடம்பாக்கத்தில் சில திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: இது எதுக்குடா வம்பு? நைசாக நழுவி நின்ன ரஜினி.. எல்லா களத்துலயும் கிங்னு நிரூபிச்ச விஜய்
சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி நீண்ட நாள்களாகி விட்டன. அதுவும் அவர் மும்பையில் செட்டிலாகி விட்டதால் தமிழ் ரசிகர்கள் சூர்யாவை மறந்தே போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் கங்குவா படத்திற்கு முன் எப்படியும் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. ஏற்கனவே அயலான் பட இயக்குனரிடம் ஒரு அவுட் லைனை கேட்ட சூர்யா அதை டெவலப் பண்ண சொல்லிக் கேட்டிருக்கிறார்.
அவரும் நான்கு வருடமாக ஸ்கிரிப்டை தயார் செய்து சூர்யாவிடம் கொடுக்க அவருக்கு அது பிடிக்கவே இல்லையாம். அதனால் அந்த கதையும் சூர்யாவிடம் இருந்து போய்விட்டது. இதன் காரணமாக ஏற்கனவே ஒரு ஸ்கிரிப்டை வைத்திருக்கும் இயக்குனரை தேடிக் கொண்டிருந்தாராம் சூர்யா. அப்போது மாட்டியவர்தான் கார்த்திக் சுப்பாராஜ். அதுவும் கார்த்திக் சுப்பாராஜ் இந்த கதையை விஜய் மற்றும் தனுஷுக்காக வைத்திருந்தது என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நான் ரெக்கார்டு செய்த அந்தப் பாடல் தான் அஜீத்தோட லவ் லட்டர்… பரத்வாஜ் சொல்லும் புதுத்தகவல்
இதற்கிடையில் வாடிவாசல் படமும் இப்போது பிரச்சினையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் இருந்து தாணுவே விலகப்போவதாகவும் ஒரு சில செய்திகள் வெளியாகி கொண்டு வருகின்றதாம். அதனால் சூர்யாவுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்கும் படி தாணு கேட்பதாகவும் சூர்யாவும் கொடுக்கும் மன நிலையில்தான் இருக்கிறார். இருந்தாலும் வட்டியுடன் தாணு கேட்பதாக தெரிகிறதாம். அதனால்தான் அவசர அவசரமாக இந்த சூர்யா 44 படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.