சிவக்குமாரின் பேச்சை கேட்காத சூர்யா – கார்த்தி?… எல்லா பிரச்சனைக்கும் இதுதான் காரணமா?!..

Published on: December 7, 2023
sivakumar
---Advertisement---

Sivakumar: சிவகுமார் தமிழ் சினிமாவில் பழங்கால நடிகர். இவர் காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் கந்தன் கருனை, நவகிரகம், அரங்கேற்றம் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினார்.

இவரின் மகன்களான சூர்யா கார்த்தி அப்பா பேச்சை மீறாத பிள்ளைகள். இவரது பேச்சை மீறாதவண்ணம் இவர் தனது இரு மகன்களையும் வளர்த்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையிலோ சரி சினிமா வாழ்க்கையிலோ சரி இவர்கள் இவர்களது தந்தையின் பேச்சை மீறுவதில்லை.

இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

இதுவரை சினிமாவில் எந்தவிதமான கிசுகிசுக்களும் வராத ஒரே நடிகர் சிவகுமார் தான். அந்த அளவு இவர் மிக ஒழுக்கமாக வாழ்ந்துள்ளார். இவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கூட இருந்தது இல்லையாம். இவரது குடும்பம் என்றாலே ஒரு தனித்தன்மை இருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கிய சிவகுமாருக்கு இப்போது அவரின் மகன்களே பெரிய அவமானத்தை தேடி தந்துள்ளனர்.

இதையும் வாசிங்க:பாலச்சந்தருடன் முதல் சந்திப்பு!.. ரஜினி கேட்ட கேள்வி!.. நடிக்க வாய்ப்பு கிடைச்சது இப்படித்தான்!..

பருத்திவீரன் திரைப்படத்தில் அமீருக்கு ஏற்பட்ட அநியாயமே இவருக்கு கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்துவிட்டதாக பிரபல திரைவிமர்சகரான பிஸ்மி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் அமீர் சர்ச்சை சிவக்குமாருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் எனவும் மேலும் அமீர் கேட்கும் தொகை சிவகுமாருக்கு பெரிய விஷயமே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் கண்டிப்பாக சிவகுமார் சூர்யா கார்த்தியிடம் இந்த பிரச்சினையை முடித்துவிடும்படி கூறியிருப்பார் எனவும் ஆனால் சூர்யா கார்த்தி அதை கேட்காமல் அப்பாவின் பேச்சை உதாசினபடுத்தியுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக சிவகுமார் இந்த மாதிரியான பெயரையெல்லாம் விரும்பமாட்டார் எனவும் ஆனால் தற்போது தனது மகன்களால் இவரது பெயருக்கும் அழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பிஸ்மி தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:அப்போ வாய மூடிட்டுதான இருந்தீங்க… Me Too குறித்து நடிகை சீதாவின் பகிர் குற்றச்சாட்டு…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.