ஜோதிகா தான் வேண்டும்..! அசினை திட்டம் போட்டு தூக்கிய சூர்யா..! எந்த படத்தில் தெரியுமா?

Surya Jothika: கோலிவுட்டின் அழகு ஜோடியாக பார்க்கப்படுவது ஜோதிகா மற்றும் சூர்யா தான். இப்போதே இப்படி என்றால் இவர்கள் இணைந்து நடித்த போது இவர்களுக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் எக்கசக்கம் தான். இவர்களின் கல்யாணத்தில் கூட எல்லாமே ட்ரெண்ட் ஆனது.
பப்லி நாயகியாக கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் ஜோதிகா. அவரின் முதல் படமான வாலி அவருக்கு ஒரு அங்கீகாரத்தினை கோலிவுட்டில் வாங்கி கொடுத்தது. தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வந்த ஜோதிகா வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதலில் சூர்யாவுடன் இணைந்தார்.
இதையும் படிங்க: ரொமான்ஸ் சீன் எடுக்கும்போது சாரி கேட்டா எப்படி?!.. சரோஜாதேவியிடம் Fun பண்ணிய எம்.ஜி.ஆர்…
அப்போதே இந்த ஜோடி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியது. தொடர்ச்சியாக உயிரிலே கலந்தது, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன், ஜூன் ஆர், மாயாவி உள்ளிட்ட ஏழு படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதிலும் காக்க காக்க படத்துக்கு சூர்யாவை பரிந்துரைத்ததே ஜோதிகா தான்.
இதை தொடர்ந்து காக்க காக்க படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். அந்த படத்தில் இரண்டு நாயகிகள். குந்தவை மற்றும் ஐஷு என இரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்படத்தில் அப்போது கஜினி படத்தின் மூலம் ஹிட் நாயகியாக இருந்த அசினை கேட்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..
ஐஷு கதாபாத்திரம் அசினை கவராத காரணத்தினால் தான் அந்த படத்தில் நடிக்காமல் விலகி இருக்கிறார் அசின். அதன் பிறகே பூமிகாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த படம் இருவரின் திருமணத்தினை ஒட்டி ரிலீஸானதால் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.