எப்படி போனேனோ அப்டியே திரும்பி வந்திருக்கேன்… மாஸ் லைன் அப்களால் திணறடிக்கும் சூர்யா!..
Surya: சூர்யாவின் நடிப்பில் தமிழில் கடைசியாக ரிலீஸான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் தான். அதை தொடர்ந்து சூர்யாவின் படங்கள் போன வருடத்தில் இருந்து எதுவும் ரிலீஸாகாமல் இருக்கும் நிலையில் மாஸ் லைன் அப்களை கையில் வைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ் ஹிட் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் திரைப்படம் தான். இதை தொடர்ந்து தமிழில் ஒரே படத்தினை மட்டுமே சூர்யா நடிப்பில் ரிலீஸ் செய்து இருந்தனர். அந்த நேரத்தில் தான் சூர்யாவும் தன் குடும்பத்துடன் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.
இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜம்முன்னு ரெடியான ரஜினி குடும்பம்!.. வைரலாகும் போட்டோவை பாருங்க!..
மும்பையில் அலுவலகத்தினை திறந்துவிட்டார். தொடர்ந்து இந்தியில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வந்ததாக தகவல்கள் தெரிவித்தது. தற்போது தமிழில் சூர்யா நடிப்பில் எப்போ படம் ரிலீஸாகும் என அவர் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் தற்போது சில மாஸ் அப்டேட்கள் வெளியாகி இருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்த நிலையில் படம் விஎஃப்எக்ஸ் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ட்ரைலர் ரிலீஸாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம். அதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் புறநானாறு திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் மதுரையில் தொடங்கப்பட இருக்கிறதாம். சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஹீரோயின்னு ஃபிக்ஸ் பண்ணதுக்கு பிறகு எதுக்கு இந்த டெஸ்ட்? சிம்பு செஞ்ச வேலைய பாருங்க
அதை தொடர்ந்து பாலிவுட்டில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் கர்ணா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜான்வி கபூர் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முதல் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் வாடிவாசல் படத்தில் சூர்யாவை தொடர்ந்து நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தற்போது முழுநேர ஸ்க்ரிப்ட் பணிகளை வெற்றிமாறன் செய்து வருவதாகவும் விடுதலை2 முடித்த பிறகு அதற்கடுத்த பணிகள் தொடங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
2025ம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா45 படத்தில் கலந்துக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்திலும் சூர்யா நடிப்பார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.