கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! சம்பளத்தை உயர்த்த இப்படி ஒரு ஸ்கெட்சா? சூர்யா கையாளும் யுத்தி

Published on: April 8, 2024
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் கங்குவா திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்று பின்னனியில் உருவாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

ஸ்டூடியோ கிரீன் தான் படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் திடீரென சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் உருவாகப் போகும் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். யாரும் எதிர்பாராத கூட்டணி. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு சம்பளமே இல்லையாம். சூர்யாவிற்கு மட்டுமில்லாமல் கார்த்திக் சுப்பாராஜாவுக்கு சம்பளம் இல்லையாம்.

இதையும் படிங்க: சின்ன வயசுலயே டீச்சர்கிட்ட இப்படி ஒரு கேள்வியா? தலைமுடியை வெட்ட சொன்னதுக்கு சிம்பு சொன்னது என்ன தெரியுமா

ஏனெனில் சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்பாராஜ் நிறுவனமும் சேர்ந்துதான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்களாம். அதனால் இந்தப் படத்தின் ப்ராஃபிட் ஷேரில்தான் இருவரும் பங்கும் கேட்டிருக்கிறார்களாம். மேலும் கங்குவா படத்திற்கு சூர்யவின் சம்பளம் வெறும் 28 கோடிதானாம். அதற்கு காரணம் 24 படத்தின் தோல்விதான். அந்தப் படத்தை அதே ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்ததால் ‘24’ படத்தின் தோல்வி அந்த நிறுவனத்தை பெருமளவு பாதித்திருக்கிறது.

அதனால் அந்த நஷ்டத்தை ஈடுசெய்யவே கங்குவா படத்திற்கு குறைவான சம்பளத்தை பெற்றிருக்கிறார். தனுஷ், சிம்பு இவர்கள் சம்பளம் எல்லாம் 50 கோடி, 40 கோடி என சென்றுக் கொண்டிருக்கையில் சூர்யாவின் சம்பளம் மட்டும் பேசு பொருளாக உள்ளது. அதனால் தான் சூர்யா – கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் பெரிய அளவில் சூர்யாவிற்கு ப்ராஃபிட் ஷேர் கிடைத்தால் அதே தொகையைத்தான் அடுத்த படத்திற்கு சம்பளமாக நிர்ணயிப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன பிரபல நடிகை!.. அட அவரு கமலையும் விட்டு வைக்கலயே!..

ஒரு வேளை சூர்யாவுக்கு 75 கோடி ப்ராஃபிட் ஷேர் கிடைத்தால் அதுவே அவருடைய சம்பளமாக மாறும் என்று கூறுகிறார்கள். என்ன இருந்தாலும் தயாரிப்பாளரின் நிலைமையை அறிந்து அதற்கெற்ப தன் சம்பளத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் சூர்யாவை போல் வேறெந்த நடிகரும் இந்த கோடம்பாக்கத்தில் இல்லை.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.