Surya: சூர்யாவுக்கு குடைச்சல் கொடுக்கும் எஸ்கே… அவ்வளவுதான் முடிச்சி விட்டீங்க போங்க!..

Published on: November 12, 2024
Surya
---Advertisement---

Surya: நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூலில் பெரிய இடி விழுந்து இருக்கிறது.

கங்குவா திரைப்படம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Sun serials: சுந்தரி முதல் கயல் வரை… சன் டிவி டாப் 5 தொடர்களின் இன்றைய எபிசோட் இதுதான்…

வரலாற்று படமாக மிகப்பிரமாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா ஆயிரம் கோடி வசூலை எட்டும் என தயாரிப்பு குழுவால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்திற்கு நடிகர் சூர்யா பல மாநிலங்கள் தொடர்ச்சியாக பறந்து பிரமோஷன் செய்து வருகிறார்.

கங்குவா சிக்கல்: அர்ஜுன் லால் சுந்தரதாஸ் என்பவரிடம் ஞானவேல் ராஜா பெரிய தொகை கடனாக பெற்றிருக்கிறார். அர்ஜூன் லால் மரணமடைந்து விட்டதால் கடனை திருப்பி வாங்கும் பணியை நீதிமன்றம் செய்து வருகிறார். இதனால் அந்த கடனை திருப்பி செலுத்தும் வரை கங்குவாவை வெளியிட கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.

தற்போது 20 கோடியை நீதிமன்றத்தின் சொத்தாட்சியரிடம் ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் 13ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதில் தவறும் பட்சத்தில் கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதில் தடை விதித்து நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 நாள் கொல பட்டினி!.. என் பசியை போக்கியது அதுதான்!.. இளையராஜா உருக்கம்!…

சிவகார்த்திகேயனால் ஒரு சிக்கல்: அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடப்பட இருந்த கங்குவா திரைப்படம் ரஜினிகாந்தின் வேட்டையனை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டது. தனிப்படமாக வெளியிட்டால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் திட்டமாக இருந்தது.

ஆனால் தீபாவளி  தினத்தில் வெளியான சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. இதனால் கங்குவா திரைப்படத்திற்கு மொத்த திரையரங்குகளும் கிடைக்காத நிலையை உருவாக்கி விட்டது. தமிழகத்தில் இருக்கும் ஆயிரத்து நூறு தியேட்டர்களில் 700 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது.

புதிதாக வெளியான திரைப்படங்களின் முதல் வாரத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பங்கு 25% மட்டுமே. ஆனால் இரண்டாம் வாரத்தில் இருந்து பங்கு 35 சதவீதமாக உயரும். இதனால் கங்குவா திரைப்படத்தை விட வெற்றி படமாக இருக்கும் அமரன் லாபத்தால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Vijay: ஆக்டிங் மட்டுமில்ல!.. சின்ன வயசில இருந்தே விஜய்க்கு அந்த ஆசை உண்டு!.. எஸ்.ஏ.சி பேட்டி!…

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.