‘கங்குவா’ பட வைப்! மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்! – ஒன் லைன் கேட்டா அசந்துபோவீங்க!..

Published on: August 23, 2023
surya
---Advertisement---

கோலிவுட்டில் ஒரு திறமை வாய்ந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சூர்யா. அப்பா ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும் சினிமாவை பற்றி எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் நுழைந்தவர் தான் சூர்யா. ஆனால் சூர்யாவை நடிகனாக்க சிவக்குமாருக்கு துளி கூட விருப்பமில்லை என பல மேடைகளில் சிவக்குமார் சொல்லி கேட்டிருக்கிறோம்.

சினிமாவிற்கும் சூர்யாவிற்கும் சம்பந்தமே இல்லாத வகையில் தான் ஆரம்பகாலங்களில் சூர்யா இருந்திருக்கிறார். நடிக்க தெரியாது, நடனம் ஆட தெரியாது. எந்த ஒரு உணர்வுகளையும் வெளிப்படுத்த தெரியாது. இப்படி ஒருத்தர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அது ஒரு சவாலான விஷயம்தான்.

இதையும் படிங்க : உண்மையிலேயே நடிகையர் திலகம் 2 தான்! கதைக்காக ஒரு வார காலம் எங்க இருக்காங்க தெரியுமா?

ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் போக போக கதைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டார் சூர்யா. நந்தா படம் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படமாகும். அதுவரை சூர்யாவை யாரும் அப்படி பார்த்ததில்லை. உள்ளே போய் பார்த்தால் தான் ஒருவரின் ஆள் மனசு தெரியும் என்று சொல்வார்கள்.

அதே போல்தான் சூர்யாவும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து  நடிக்க தொடங்கினார். அப்படியே படிப்படியாக வளர்ந்து ஒரு தயாரிப்பாளராக, சிறந்த நடிகராக, இன்று உச்சம் தொட்டு நிற்கிறார். சமீபத்தில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு வரலாற்று பின்னனியை மையப்படுத்தி அந்தப் படம் தயாராகி கொண்டிருப்பதால் அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : கார்த்தி பட ஹீரோயினை தட்டி தூக்கிய சூர்யா!.. அடுத்த படத்துல அவங்கதான் ஹீரோயினாம்!..

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனரான சண்டூ மொண்டேட்டி சூர்யாவை வைத்து படம் பண்ணப்போவதாக தெரிவித்திருக்கிறார். 4 மறை வேதங்களான ரிக், யஜூர், சாமம், அதர்வணம் இதை தழுவியதாக தான் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாக இயக்குனர் சண்டூ மொண்டேட்டி கூறியிருக்கிறார்.

இவர் ஏற்கெனவே தெலுங்கில் சூப்பர் ஹிட் படமான கார்த்திகேயா 2 என்ற படத்தை இயக்கியவர்தான் சண்டூ மொண்டேட்டி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.