Cinema News
நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல
Ajith Surya: தமிழ் சினிமாவில் ஆசை படம் தான் அஜித்துக்கு ஒரு பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படமாக அமைந்தது. அந்த படத்தில் இருந்து அவருக்கு ஆசை நாயகன் என்ற பெயரும் வந்தது. இதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்தாலும் இந்த படம் தான் அஜித்தின் கெரியரிலேயே மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
அப்படியே தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். அஜித் சினிமாவில் எண்ட்ரி ஆனதில் இருந்து இவருக்கும் விஜய்க்குமான போட்டி தான் இருந்து கொண்டே வந்தது. கடைசியாக வெளியான துணிவு படம் மற்றும் விஜயின் வாரிசு படம் இந்த இரண்டு படங்களுமே ஒன்றாக ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது.
இதையும் படிங்க: கார்த்திக் ஹீரோவாக நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பாவா லட்சுமணனா? இது என்ன புதுசா இருக்கு?
இப்படி அவர்கள் இருவருமே நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதில் இருந்து அந்த இருவரின் படங்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. துணிவு வாரிசு படத்திற்கு பிறகு மீண்டும் அதே மாதிரியான ஒரு போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அதற்கேற்ற வகையில் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தையும் விஜய் வாரிசு படத்திற்கு பிறகு கோட் திரைப்படத்திலும் முழுமூச்சாக நடித்துக் கொண்டு வர விடாமுயற்சி படத்தில் ஏற்பட்ட சில பல காரணங்களால் அந்த படம் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதனால் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது.
இதையும் படிங்க: அதை மட்டும் கரெக்டா சொன்னா எந்தப் படமும் ஹிட் தான்…! வெற்றிப்பட இயக்குனர் சொல்லும் சீக்ரெட்
விடாமுயற்சியின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டு வருகிறது. இப்படி விஜய் அஜித் போட்டியை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்போது ஒரு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கின்றது. அது என்னவெனில் விடாமுயற்சி திரைப்படத்துடன் சூர்யா நடித்த கங்குமா திரைப்படம் தான் ஒன்றாக மோத இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தீபாவளி அன்று விடாமுயற்சியுடன் கங்குவா மட்டுமல்லாமல் கவின் நடிக்கும் திரைப்படம் கிஸ் மற்றும் எல்ஐசி திரைப்படம் போன்ற நான்கு திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.