ஒருதலை ராகம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் டி.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் தயாரிப்பு, பாடல்கள், எடிட்டிங், கலை என எல்லா ஏரியாவிலும் இறங்கி அடித்தவர்.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே இயக்குனர் எல்லா ஏரியாவிலும் திறமை கொண்டவராக இருந்தவர் என்றால் அது டி.ராஜேந்தர் மட்டுமே.. அப்படி எல்லா படங்களிலும் செய்து ஹிட் படங்களையும் கொடுத்தார் என்பதுதான் ஆச்சரியம்.
அவர் இயக்கி நடித்து வெளியான உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, என் தங்கைக்கோர் கீதம், ஒரு தாயின் சபதம், உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ன்னும் சொல்லப்போனால் இளையராஜாவின் பாடல் கேசட்டுகளை விட டி.ராஜேந்திரன் பாடல் கேசட்டுகள் மற்றும் கதை வசன கேசடுகள் அதிக விற்பனையானது.
ரஜினி படங்களை விடவும் டி.ராஜேந்தர் படங்களுக்கு அதிக வசூல் வந்தது. ரஜினி படம் ரிலீஸின்போது டி.ஆர் படம் வெளியானால் ரஜினியே டி.ராஜேந்தரை தொடர்பு கொண்டு ‘உங்கள் படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க முடியுமா?’ என கோரிக்கை வைத்து கதையெல்லாம் நடந்தது.
இந்நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியது டி.ராஜேந்தர் ‘என் கெரியரின் ஆரம்ப காலத்தில் சினிமா உலகில் யாருமே என்னை மதிக்கவில்லை.. ஆனால் ரஜினி என்னை பலமுறை 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து பேசி எனக்கு மரியாதை கொடுத்திருக்கிறார்’ என்று பேசியிருக்கிறார்.



