அவங்கள் பாத்தாவது திருந்துங்க!.. இல்லனா தமிழ் சினிமா காலி!.. டி.ஆர் அட்வைஸ்!..

Published on: January 5, 2026
T.Rajendar
---Advertisement---

ஒரு படத்தை எடுப்பதில் கதை. திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் அந்த படத்திற்கான செலவு. இந்த பட்ஜெட்டில் இந்த கதையை எடுக்க வேண்டும்.. இந்த பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் தாங்காது.. என்பது ஒரு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியவில்லை என்றால் அந்த படம் பல கோடிகளை சாப்பிட்டு விடும்.. அதோடு தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கும். அப்படி சினிமாவை விட்டு போன பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

கதைக்கு தேவையில்லாத பிரம்மாண்டங்களையோ, கதைக்கு தேவையில்லாத செலவையோ செய்தால் அது ரசிகர்களிடம் வரவேற்பை பெறாது. இதற்கு தமிழ் சினிமாவில் பல உதாரணங்கள் இருக்கிறது.
எனவே கதைக்கு ஏற்ற செலவுதான் தேவை. அதுதான் தயாரிப்பாளருக்கும் லாபத்தை கொடுக்கும்.. ஆனால் பல இயக்குனர்களுக்கும் அது புரிவதே இல்லை. தன்னை பெரிய இயக்குனர்கள் என காட்டிக்கொள்வதற்காக நிறைய செலவு செய்து படத்தை எடுப்பார்கள்.

அதுவும் விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்கள் கிடைத்து விட்டால் 400 கோடி கொட்டி படம் எடுப்பார்கள். இந்த படத்திற்கு என்ன வியாபாரம்?.. தயாரிப்பாளருக்கு லாபம் வருமா? என எதையும் யோசிக்கவே மாட்டார்கள்
. இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் ‘ஒரு படத்தோட பட்ஜெட் பிரேம்ல தெரியணும்.. தயாரிப்பாளர்கள் சும்மா நடிகர் வீட்டுக்கும் இயக்குனர் வீட்டுக்கு போக கூடாது..

பிரேம்ல தெரிஞ்சாதான் மக்கள் வருவாங்க.. வசூல் கொட்டும்.. கன்னட, மலையாளம், தெலுங்கு சினிமாக்களை பார்த்து பொறாமைப் படமா அவங்க எப்படி படம் எடுக்கிறாங்கன்னு அவங்ககிட்ட இருந்து கத்துக்கோங்க..2025லதான் ஒன்னும் தெரியாம போச்சி.. 2026-ல் திருத்திக்கோங்க.. அப்பவும் திருத்தலனா தமிழ் சினிமா ஆயிடும் அப்பீட்டு’ என தெறிக்கவிட்டிருக்கிறார்.