ஐய்யய்யோ அப்படி சொல்லவே இல்ல! ‘சுறா’ படத்தை பற்றி இப்ப என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க தமன்னா
Actress Tamannah: தமிழ் சினிமாவில் டாப் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. கல்லூரி என்ற படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து பல படங்களில் நடித்து நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். அஜித், விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி என பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற நடிகையாக வளர்ந்திருக்கிறார்.
கவர்ச்சியில் குதூகலிக்கும் தமன்னா சமீபகாலமாக தான் அணியும் ஆடைகளின் மூலம் க்ளாமரை அள்ளித்தெளித்து வருகிறார். அதுவும் காவாலா சாங் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும். ஒரு முன்னனி நடிகையாக இருந்து யாரும் இப்படி ஒரு ஐட்டம் டான்ஸ் ஆட முடியாது. சமந்தாவை அடுத்து தமன்னாவும் ஐட்டம் ஆடலுக்கு ஆடி தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பத்மபூஷன் விருதை நிராகரித்த பாடகி எஸ்.ஜானகி… கெத்து இருந்தாதான் இப்படி காரணம் சொல்ல முடியும்!
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் தமன்னா நீண்ட நாளுக்கு பிறகு தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு தமன்னாவுக்கு கிடைக்கும் என்றும் சுந்தர் சி கூறினார்.
அதுமட்டுமில்லாமல் ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு எப்படி தமன்னாவின் காவாலா பாடல் உதவியதோ அதே போல் ஒரு பாடல் அரண்மனை 4லும் இருப்பதாகவும் சுந்தர் சி கூறினார். காவாலா பாடலை அரண்மனை பட பாடல் தூக்கி சாப்பிட்டு விடும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இனிமே என் வாழ்க்கையில அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஜய் தேவரகொண்டா ரொம்ப பட்டுட்டாராம்!..
இந்த நிலையில் சுறா படத்தில் நடிச்சதுதான் நான் செய்த தப்பு என முன்பு ஒரு பேட்டியில் தமன்னா கூறியிருப்பார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தமன்னாவை கிழி கிழி என கிழித்தனர். இப்போது அதை பற்றி கேட்கையில் பதில் கூறிய தமன்னா ‘ நான் அந்த மாதிரி அர்த்தத்தில் கூறவில்லை. அந்தப் படத்தில் என்னுடைய பெர்ஃபாமன்ஸ் நன்றாக இல்லை’ என்றுதான் கூறினாராம். மற்ற படி விஜயுடன் நடனம் ஆடியது, நடித்தது எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது என சமீபத்தில் தமன்னா கூறினார்.