எம்மா இப்போ உங்களுக்கு வெட்கமே இல்லையா? ‘லால் சலாம்’ பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்

Lal salaam Movie: நேற்று கோலாகலமாக நடைபெற்றது லால்சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் லால்சலாம். பெரிய ப்ரடக்‌ஷன் லைக்கா தயாரிப்பில் படம் பிரம்மாண்டமாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களாக இருக்கும் பல இயக்குனர்களும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் […]

Lal salaam Movie: நேற்று கோலாகலமாக நடைபெற்றது லால்சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் லால்சலாம்.

பெரிய ப்ரடக்‌ஷன் லைக்கா தயாரிப்பில் படம் பிரம்மாண்டமாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களாக இருக்கும் பல இயக்குனர்களும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வந்திருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தினார்கள்.

இதையும் படிங்க: புரமோஷனுக்காக எதையும் செய்வது புரமோஷன் ஆகாது… சந்தானத்தினை பொளந்த பிரபலம்…

இந்தப் படத்தில் பிரபல நடிகை தான்யா பாலகிருஷ்ணனும் நடித்திருக்கிறார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட தான்யா பாலகிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவருடைய முதல் அறிமுகம் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம். அதில் சுருதிஹாசனுக்கு தோழியாக வருவார்.

அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து சப்போர்ட்டிங் கேரக்டரிலேயே நடித்து வந்தார் தான்யா. குறிப்பாக ராஜா ராணியில் அவர் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனர் பாலாஜி மோகனை கடந்த வருடம்தான் திருமணம் செய்திருக்கிறார். தெலுங்கில் ஒரே ஒரு படத்தில்தான் லீடு ரோலில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. குட்டி இடுப்பை காட்டி குஷியேத்தும் வேதிகா…

இந்த நிலையில் லால்சலாம் படத்திலும் இவர் இப்போது நடித்திருப்பதால் நேற்று நடந்த விழாவிலும் கலந்து கொண்டார். அதிலிருந்தே நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது ஒரு சமயம் இவருடைய இணையதள பக்கத்தில் ‘அன்புக்குரிய சென்னை, தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை கேட்கிறீர்கள். கரண்டுக்காகவும் பிச்சை எடுக்கிறீர்கள், எல்லாவற்றையும் தருகிறோம். இப்போது ப்ளே ஆஃபிலும் எங்களுடைய தயவு உங்களுக்கு தேவைப்படுகிறது. இருந்தாலும் கொடுக்கிறோம். இப்படி எங்களிடமே மண்டியிட்டு கிடக்கிறீர்களே. உங்களுக்கு வெட்கமா இல்ல?’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவை தேடிப்பிடித்த நம் ரசிகர்கள் என்னம்மா இப்போ உனக்கு வெட்கமா இல்லையா? இங்க வந்துருக்க? என கேட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: ‘மாநாடு’ பிடிக்கலைனுட்டாங்க.. ஹீரோ ரெடியா இருக்கனும்! பார்ட் 2 பற்றி தயாரிப்பாளர் சொன்னதை கேளுங்க

CR
ஆசிரியர்

Rohini

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →