More
Categories: Cinema History Cinema News latest news

தெரிஞ்ச ரூட்டை மாத்தி பல்பு வாங்கிய இயக்குனர்கள்… அஜித், விஜய், விக்ரம் எல்லாம் பாவம்.! ஆதாரம் இதோ…

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு விதமாக கதை சொல்லும் திறன் இருக்கும். அதனை சரியாக புரிந்து கொண்டு அதில் பயணித்தவர்கள் தற்போது வரை வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தனக்கு நன்கு தெரிந்த பாதையை தவிர்த்து புதுவிதமாக முயற்சி செய்வோம் என்று வேறு விதமான படங்களை இயக்கி தோல்வியை கொடுத்துவிட்டு மீண்டும் தனது பழைய பாணிக்கு திரும்பி விடுவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களின் லிஸ்ட் இதோ…

Advertising
Advertising

அமீர் – மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற தரமான படங்களை இயக்கியவர் அமீர். அவரது கதையில் ஹீரோயிசம் இருக்காது. கதையோடு வந்த ஹீரோயிசம் தான் இருக்கும். கதைக்களம் தான் அவரது படத்தின் ஹீரோ. அதனை மீறி அவர் இயக்கிய திரைப்படம் தான் ஆதிபகவன். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து இந்த திரைப்படம் அமீர் படத்தில் இருந்து வித்தியாசப்பட்டு இருந்ததால் தோல்வியை தழுவியது.

சுந்தர்.சி – காமெடி கலந்த மசாலா படங்களை இயக்குவதில் சுந்தர்.சி கில்லி.. அவரை மிஞ்ச தற்போது வரை ஆளில்லை என்றே கூறலாம். ஆனால், அதனை விடுத்து தேவையில்லாமல் விஷாலை வைத்து ஆக்சன் எனும் திரைப்படத்தை எடுத்து பல்பு வாங்கி அதன் பிறகு அரண்மனை பாகங்களை எடுத்து அதிலும் விமர்சனங்கள் கண்டு தனது, தற்போது தனது பழைய பார்மட்டுக்கு காபி வித் காதல் திரைப்படம் மூலம் திரும்பி உள்ளார்.

இதையும் படியுங்களேன் – மணிரத்னம் வேண்டாம்…. வெற்றிமாறனுக்கு ஓகே.! அஜித் பட இயக்குனரின் அட்டகாசமான முடிவு.!

சிறுத்தை சிவா – கிராமத்து கமர்சியல் கதைகளையும்,ஆக்சன் கமர்சியல்  திரைப்படம் செண்டிமெண்ட் கலந்து எடுப்பதில் கில்லாடி. ஆனால், அதனை தவிர்த்து, ஹை டெக் திரைப்படம், ஹாலிவுட் லெவெலில் எடுக்கிறேன் என எடுத்து ரசிகர்களை விவேகம் படம் மூலம் பதம் பார்த்துவிட்டார். அதன் பின்னர் இது சரிப்பட்டு வராது என  விஸ்வாசம் திரைப்படம் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்தார் சிவா.

சுசீந்திரன்  – இவர் படத்தில் கதைக்களம் தான் ஹீரோ. கிராமத்து கதைக்களமாக இருந்தாலும், நகரத்து கதைக்களமாக இருந்தாலும் யதார்த்தம் மீறாமல் ஹிட் கொடுத்து வந்தார் சுசீந்திரன். முதன் முறையாக ராஜபாட்டை எனும் திரைப்படம் மூலம் விக்ரமை வைத்து ஹீரோயிச திரைப்படத்தை முயற்சி செய்து தோல்வி கண்டு, அடுத்து பாண்டிய நாடு மூலம் பார்முக்கு வந்தார். இருந்தும் தற்போதும் அந்த யதார்த்த இயக்குனர் சுசீந்திரன் மிஸ்ஸிங் தான்.

இதையும் படியுங்களேன் – இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!

நெல்சன் – இவர் இந்த லிஸ்டிலா? என ஆச்சர்ய பட வேண்டாம். இவரும் இதில் இருக்கிறார். ஆம். முதல் படமான கோலமாவு கோகிலா, இரண்டாம் படமான டாக்டர் என இரண்டு படங்களிலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து, அடுத்ததாக விஜயை வைத்து பீஸ்ட் படம் மூலம், அவரது ட்ரேட் மார்க் காமெடி படமாகவும் இல்லாமல், விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற ஆக்சன் படமாகவும் இல்லாமல் படம் தத்தளித்து விட்டது.

Published by
Manikandan

Recent Posts