அஜித்துடன் சேர்ந்து போட்டோதானய்யா எடுத்தேன்! மூட்டைக் கட்டி மொத்தமா வழியனுப்பி வைத்த ‘விடாமுயற்சி’ டீம்

by Rohini |
ajith
X

ajith

Actor Ajithkumar: கோலிவுட்டில் தல என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். ஆனால் இனிமேல் என்னை யாரும் தல என அழைக்கவேண்டாம் என்று அன்பான வேண்டுகோளை ரசிகர்களுக்கு விடுத்தார் அஜித். ஆனாலும் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே தல அஜித்தான் என இன்றுவரை ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த இரண்டு நாள்களாக அஜித்தின் புகைப்படங்கள் , வீடியோக்கள் என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் அஜர்பைஜானுக்கு சென்றார். அது சம்பந்தமான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படிங்க: கடுப்பான பிக்பாஸ் டீம்.. மிட் வீக் எவிக்‌ஷனில் ஒரு ஆடு காலி… யாரு தெரியுமா?

இதில் நேற்று நடிகர் ஆரவ் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அதிலிருந்து விடாமுயற்சி படத்தில் ஆரவ் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் மீண்டும் அஜித், அர்ஜூன், ஆரவ் ஆகியோர் ஒரு ஹோட்டலில் இருக்கும் புகைப்படம் வைரலானது.

அதில் கடுமையான உழைப்பிற்கு பிறகு கிடைக்கிற கேப்பில் ஒரு போட்டோ என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படம் வெளியானது. இப்படி அஜித்துடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாலே பிரபலமாகி விடுகிறார்கள். பிரபலங்களுக்கே இப்படி ஆசை இருக்கும் போது அஜித் படத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இருக்காதா?

இதையும் படிங்க: வாடிவாசலில் எந்த மாற்றமும் இல்ல.. அந்த கதை அவருக்கு தான்.. ஷூட்டிங் குறித்த அப்டேட்டை சொன்ன வெற்றிமாறன்..!

அப்படி ஒரு ஊழியர்தான் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது அஜித்திடம் போட்டோ எடுக்க கேட்டாராம். பட கெட்டப்பில் இருந்தாலும் சரி என அஜித்தும் சம்மதிக்க அந்த ஊழியர் போட்டோ எடுத்துக் கொண்டாராம். அடுத்த நிமிடமே அந்த ஊழியர் தன் வாட்ஸ் ஆப் ப்ரொஃபைலில் அந்த புகைப்படத்தை வைக்க அனைவரும் அதை ஷேர் செய்து விட்டார்களாம்.

விடாமுயற்சி படத்தின் கெட்டப்பில் அஜித் இருக்கும் அந்த புகைப்படம் வைரலானதால் படக்குழு கடுப்பாகி அந்த ஊழியரை அழைத்துக் கண்டித்ததோடு அவரை வேலையில் இருந்து வெளியேற்றி விட்டார்களாம். இது அஜித்திற்கு தெரிந்து நடந்ததா இல்லை தெரியாமல் நடந்ததா என்றும் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மசாலா ஹீரோன்னு யார் சொன்னா!?.. எந்த ஹீரோவும் செய்யாததை அப்போதே செய்த ரஜினி..

Next Story