மேக்கப் போடாம நடிக்க சொன்னதுக்கு அஞ்சலியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா? வில்லி கேரக்டருக்கு சரியான ஆளுதான்
இப்போது சன் டிவியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடராக இலக்கியா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நண்பகல் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் ஹீரோயினுக்கு டப் கொடுக்கும் ஒரு வில்லி கேரக்டரில் அற்புதமாக நடித்து வருபவர் அஞ்சலி கேரக்டரில் நடிக்கும் சுஷ்மா சுனில் நாயர்.
பெங்களூரை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு பேஷன் டிசைனராம். முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான சுமங்கலி என்ற சீரியலில் தான் இவர் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு என அதிக அளவில் பேன் பாலோயர்ஸ் உருவாக ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு இவர் நாயகி என்ற சீரியலில் அனன்யா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 250 எபிசோடுகளுக்கும் மேலாக இவர் நடித்திருந்தார். அந்த சீரியலில் ஊசி போடுவது மாதிரியான காட்சிகள் எல்லாம் இடம்பெறும். ஜெயிலுக்கு போற சீன்கள் எல்லாம் இடம்பெறும். ஜெயிலுக்கு போவதால் மேக்கப் போடாமல் ஜெயிலுக்கு போகிற மாதிரி சீன் எல்லாம் இருக்க அந்த காட்சி இவருக்கு பிடிக்கவில்லையாம்.
ஏனெனில் இவருக்கு பிடிச்சதே மேக்கப் போடுவது மட்டும் தானாம் .இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என சொல்ல அந்த காட்சியை எடுக்காமல் விட்டார்களாம். அப்படி ஒரு மேக்கப் ஆர்வலர் என்றே அஞ்சலியை சொல்லலாம்.
அதன் பிறகு தான் இலக்கியா சீரியலில் ஒரு வில்லி கேரக்டரில் இப்போது நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் சக்சஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றது . இப்போது இருக்கும் ஏராளமான ஆர்டிஸ்டிகளுக்கு இவர்தான் ஃபேஷன் டிசைனராக இருந்து வருகிறாராம் .
இவருடைய வில்லி கேரக்டரையும் தாண்டி பட்ஜெட் குடும்பம் என்ற ஒரு சீரியலில் வான்மதி என்ற கேரக்டரில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறாராம் அஞ்சலி. இவருக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாம். ஆனால் குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது.