ட்ரோல் செய்யப்படும் இனியா… பாக்கியலட்சுமியின் சீக்ரெட்டை உடைத்த அவர் அம்மா…

by ராம் சுதன் |

Bakkiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் அவரின் மகளாக இருக்கும் நேகா சமீபத்திய காலமாக ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் அவருடைய அம்மா முக்கியமான சீக்ரெட்டை உடைத்து இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொடராக இருப்பது பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப பெண் எப்படி தன்னுடைய வாழ்வில் வெற்றி பெறுகிறார் என்பதே மைய கதையாக இருந்தது. ஆனால் அதை சைட் தள்ளி தற்போது முன்னாள் கணவரை மனைவி ஏற்று கொள்வாரா என்பதாகி இருக்கிறது.

பாக்கியா மற்றும் அவர் முன்னாள் கணவர் கோபி டைவர்ஸ் வாங்கி விட்டனர். இருந்தும் அவருடைய விஷயத்தில் கோபி தொடர்ந்து தலையிட்டுக்கொண்டே இருந்தார். இதனால் அவர் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் அந்த வீட்டில் தங்குவதும் அனுப்பி விடுவதும் என தொடர் கதையாக நடந்தது.

இதில் சில எபிசோட்டுக்கு முன்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதுவும் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தனர். அவரின் முதல் மனைவி பாக்கியா உதவி செய்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கோபியின் நடவடிக்கைகள் மொத்தமாக மாறிவிட்டது.

இதில் அவர் மீது கோபமாக இருந்த அம்மா ஈஸ்வரியும் மீண்டும் பிள்ளை புராணம் பாட தொடங்கிவிட்டார். மீண்டும் ராதிகா வீட்டிற்கு வர ரசிகர்கள் எப்ப தான் இதை முடிப்பீங்க? அங்க போறது இங்க வரதுனு இதே கதையை அரைக்கிறத நிப்பாட்டுங்க என்றனர்.

சில எபிசோட் முன்னர் ராதிகா கோபியை விட்டு விலகினார். டைவர்ஸ் நோட்டீஸும் ராதிகாவிடம் இருந்து வந்தது. இதற்கிடையில் அதில் பாக்கியா மகளாக நடிக்கும் இனியா ஒரு டான்ஸ் ஷோவில் கலந்துக்கொண்டு இருப்பது போல காட்சிகள் இருந்தது.

ஆனால் அவர் அந்த போட்டியின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிவிடுவார் ஆனால் அதற்கு ராதிகாவை காரணமாக சொல்லி சண்டை போடுவார். அந்த டான்ஸ் காட்சிகள் வரிசையாக தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து இனியாவாகா நடிக்கும் நேகா தரப்பு கூறுகையில், அந்த டான்ஸ் டிரஸ் சீரியல் தரப்பு கொடுத்தது தான். இவ்வளவு விமர்சிக்கலாமா? சீரியல் விரைவில் முடிய போகிறதாக சொல்வதால் நாங்களும் ஏன் கடைசியில் பிரச்னை செய்ய வேண்டும் என அமைதி காப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த ஆச்சரிய தகவலாக விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் மூடுவிழா காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story