சும்மா இருந்த பாக்கியலட்சுமி டீம்... ஒத்த சீனால் இப்படி பல்ப் வாங்குறாங்களே
Bakkiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய சீன் ஒன்றால் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்தான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கணவனை பிரியும் பாக்கியா தனியாக பிசினஸ் செய்து முன்னேறி வருகிறார். அவருக்கு இரண்டு மகன்களும், மகளும் இருக்கின்றனர். ஒரு மகன் மட்டுமே பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்ய மற்ற இருவரும் என்ன இருந்தாலுல்ம் தந்தைக்காக மட்டுமே பேசுகின்றனர்.
அப்படி செல்ல மகளாக இருப்பவர் தான் இனியா கேரக்டர். அம்மா பேச்சை கேட்காமல் எப்போ பார்த்தாலும் தேவையே இல்லாமல் செய்து திட்டு வாங்குவதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அப்பா என்ன செய்தாலும் அவருக்கு சப்போர்ட் பேசி அம்மாவை கடுப்பேத்தி கொண்டு இருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலும் பாக்கியா பேச்சை கேட்காமல் டேடியை வைத்து டான்ஸ் மாஸ்டரை ஏற்பாடு செய்தார். தொடர்ந்து வென்றார். பைனல் வரை சென்ற போது அப்பா, அம்மாவை அவரே மேடைக்கு அழைத்து கோபி தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் மேடைக்கு ஏற இனியா கோபமாகி விட்டார்.
அதற்கும் டேடியை விட்டு ராதிகாவை வறுத்தெடுத்து கொண்டு இருந்தார். அப்படி அந்த ஃபைனலில் இனியா ஆடிய டான்ஸ் தான் தற்போது டாக் ஆஃப் தி சோஷியல் மீடியாவாகி இருக்கிறது. இதெல்லாம் ஒரு டான்ஸ்னு அதுக்கு பிரைஸ் கொடுக்கலனு வேற காமெடி பண்றதெல்லாம் கொடுமை என கலாய்த்து வருகின்றனர்.