புது ஸ்டைலில் பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு மிரட்டல் விடுத்த பெண்! எவ்வளவுதான் மனுஷன் தாங்குவாரு?
விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் முன்னிலையில் இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியல். சீரியல் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அதே பரபரப்பில்தான் சென்று கொண்டிருக்கிறது. டி.ஆர்.பியில் என இந்த சீரியலுக்கு என ஒரு முக்கியத்துவம் எப்போதுமே இருந்து வருகின்றன. பாக்கியாவை தன் குடும்பத்திற்காகவே திருமணம் செய்து கொள்கிறார் கோபி.
ஆரம்பத்தில் இருந்தே பாக்கியாவிடம் எந்தவித ஆசையும் இல்லாதவராகத்தான் கோபி இருந்து வருகிறார். ஏற்கனவே ராதிகா என்ற பெண்ணை காதலித்த கோபி ஒரு கட்டத்தில் விஷயம் வெளியே தெரியவர ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். விவாகரத்துக்கு பின் பாக்கியா அவருடைய சொந்த உழைப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதில் ராதிகா கர்ப்பமாக ஒரு சமயத்தில் கால் தடுமாறி கீழே விழ அந்த கர்ப்பம் கலைந்துவிடுகிறது. இதனால் கோபமடைந்த ராதிகா ஈஸ்வரியை திட்ட கோபி தன் அம்மா ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.
இப்படி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நிகழ ஒட்டுமொத்த பெண் ரசிகைகளும் கோபிக்கு எதிராக சூழ்ந்து கொண்டனர். சீரியல் ஆரம்பித்ததில் இருந்தே கோபியை திட்டாதவர்கள் என யாருமே இல்லை. ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றெல்லாம் கோபி வீடியோ மூலம் தெரிவித்து அழுதார்.
மேலும் ரசிகர்களுக்கும் இது வெறும் சீரியல். சீரியலாக மட்டுமே பாருங்கள் என கெஞ்சியும் கேட்டுக் கொண்டார். இருந்தாலும் நம் பெண் ரசிகைகள் சும்மாவே இல்லை. தொடர்ந்து கோபியை வசைப்பாடிக் கொண்டே வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் அவருடைய நடிப்பு மட்டுமே காரணம்.
இந்த நிலையில் பெண் ரசிகை ஒருவர் கோபியின் வீட்டெதிரே நின்று கையில் எலுமிச்சை பழத்தை வைத்துக் கொண்டு சூனியம் வைத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தாராம். இதனால் பயந்த கோபி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறாராம். இந்த செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.