பாக்கியலட்சுமி ட்விஸ்ட்… சிறகடிக்க ஆசை சறுக்கல்… இந்த வாரம் விஜய் டிவியின் ஹிட் இந்த சீரியல் தானாம்…
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் முக்கிய சீரியல்களில் நிறைய மாற்றம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணிக்கு தொடர்ச்சியாக பிரச்சனைகள் உருவெடுத்து வருகிறது. இருந்தும் அதிலிருந்து அவர் லாவகமாக தொடர்ந்து தப்பித்துக் கொண்டு வருகிறார். ஆனால் இந்த முறை இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது.
ஒரு பக்கம் அண்ணாமலை நண்பர் பரசுவின் மகளுக்கு கறிக்கடைக்காரர் மணியின் சகோதரி மகனுடன் காதல் உருவாகி இருக்கிறது. அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளனர். இந்த திருமண நிகழ்வில் ஏதேனும் மிகப்பெரிய உண்மை உடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த வாரம் க்ரிஷ் படிக்கும் பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர் சந்திப்பு என்பதால் அண்ணாமலை முன்னவே சென்று விடுகிறார். முத்து மற்றும் மீனா இருவரும் கிறிஸை பார்க்க பள்ளிக்கு செல்லலாம் என முடிவெடுக்கின்றனர்.
இதனால் ஆசிரியர் சந்திப்பில் ரோகிணி எப்படி கலந்து கொள்வது என சிந்தித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக பிரச்சினைகளை உருவெடுத்தாலும் அவர் எப்படியோ தப்பித்துக் கொள்வது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது புதிய சீரியலாக தொடங்கி இருக்கும் அய்யனார் துணை டிஆர்பியில் முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது. இதனால் அதிரடி திருப்பங்கள் வராமல் போனால் டிஆர்பியில் இன்னும் இறக்கம் நடக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பு பாக்கியலட்சுமி இன்னும் சில வாரங்களில் முடிவை எட்டிக் கொண்டிருக்கிறது. அந்த சீரியலை முடித்த கையோடு தனம் மற்றும் பூங்காற்று திரும்புமா என இரண்டு புதிய சீரியல்கள் விஜய் டிவிக்கு வர இருக்கிறது. இனி அதிரடி மாற்றங்களும் இருக்கும் என நம்பப்படுகிறது.