வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை முதல் புகழ் பெற்றார்

Siragadikka aasai: தொலைக்காட்சி தொடரான சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் வெற்றிவசந்த் தன்னுடைய காதலியை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகப்படுத்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

சின்னத்திரை சீரியல்களில் சமீபத்தில் வைரலாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் நாயகனாக இருப்பவர் வெற்றி வசந்த். கிட்டத்தட்ட விஜய் சேதுபதியின் மினி வர்ஷன் ஆக இருக்கும் அவரை ரசிகர்களுக்கு பெரிய அளவில் பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்த சீரியலின் வெற்றிக்கும் காரணம் வெற்றி வசந்த்தான். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடைய காதலியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடரில் நடித்து வரும் வைஷ்ணவி தான்.

விஜய் டிவியில் அறிமுகமான வைஷ்ணவி சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தவர் பொன்னி தொடர் மூலம் நாயகியாக மாறினார். இரண்டாவது மாத காதல் நாளை கொண்டாடும் வெற்றி வசந்த் ஜோடிக்கு இந்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தற்போது இவர்களின் இந்த அறிவிப்பு இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களாக சீரியல் பிரபலங்கள் பிரபலம் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.

ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு பின்னர் தற்போது வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்று வருகின்றனர். அதுபோல வெற்றி வசந்தின் ரசிகைகள் காமெடியாக கண்ணீர் வடிப்பதையும் அவருடைய கமெண்ட்களில் பார்க்க முடிகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *