Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

வீட்டில் இருப்பவர்கள் அரசியை தேடிக்கொண்டு இருக்கின்றனர். செந்தில் மற்றும் கதிர் இருவரும் கோபத்தில் கேட்க வேண்டிய கேட்கிற மாதிரி கேட்கணும் எனச் சொல்லி கோபத்தில் குமரவேல் வீட்டிற்கு செல்கின்றனர். மயில் பயத்தில் இவங்க போய் சண்டை போட்டா எல்லாருக்கும் தெரிஞ்சிடும் என்கிறார்.

பழனியை போய் நேரில் பார்க்க சொல்கின்றனர். கதிர் மற்றும் செந்தில் வந்து குமரவேலை பற்றி திட்ட சக்திவேல் அவன் இங்க இல்ல. நீங்க என்ன வந்து இங்க கத்திட்டு இருக்கீங்க. நடு வீட்டில எதுவோ வந்த மாதிரி எதுக்கு வரீங்க என திட்டுகிறார்.

எங்க அண்ணன் என் பையனுக்கு பணக்கார பொண்ணா பாத்து வச்சிட்டு இருக்காரு. இந்த ஓடுக்காலி பெத்தவளை அவன் ஏன் பார்க்க போறான் என சத்தம் போடுகிறார் சக்திவேல். வெற்றிவேல் குமாருக்கும் அந்த பொண்ணு காணாம போனதுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்.

சக்திவேல் அண்ணன் என்ன சேம் சைட் கோல் போடுறாரு என்கிறார். அவர்களை போக சொல்கிறார். வீட்டில் பாண்டியன் இடிந்து உட்கார்ந்து இருக்க மயில் அம்மா விருப்பத்தோடு தான் கல்யாணம் ஏற்பாடு செஞ்சீங்களா எனக் கேட்கிறார். ஒன்னுக்கு பத்து தடவை கேட்டோம் என கோமதி சொல்கிறார்.

கதிர் கண்டிப்பா அரசி எந்த தப்பும் செஞ்சிருக்கவே மாட்டா. எனக்கு நம்பிக்கை இருக்கு என்கிறார். ராஜி அதான் சித்தப்பாக்கு தெரியாது எனச் சொல்கிறாரே எனக் கூறுகிறார். மயிலின் அப்பா போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

அந்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் இங்கு வந்து கொண்டு இருப்பதாக சொல்கின்றனர். எல்லாருக்கும் என்ன செய்ய போறோம் எனத் தெரியாமல் முழி பிதுங்கி நிற்க உமையாள் தன்னுடைய குடும்பத்துடன் உள்ளே வருகிறார். என்ன பதில் சொல்வது என தெரியாமல் எல்லாரும் முழிக்கின்றனர்.

குமார் அரசியை கடத்தி வச்சிக்கிட்டு விடியட்டும் என காத்திருக்கிறார். சரியாக மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டதாக விஷயம் வர அரசியை அழைத்து செல்ல முடிவெடுத்து அவரை கிளப்பி கொண்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *