Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசியின் கல்யாணம் நடக்கவிடாமல் குமார் அவரை கடத்தி சென்று தற்போது வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அண்ணன்கள் எல்லாம் அவரை அடிக்க பாய அரசி எங்கே எனக் கேட்கின்றனர்.
அவர் காரில் இருப்பதாக கை காட்ட உள்ளே இருக்கும் அரசி குமரவேல் வெளியில் போய் என்ன சொல்ல போறேன். அதனால் வீட்டில் என்ன நடக்கும் என்பதை அவரிடம் சொல்லிக்கொண்டே வருகிறார். இதனால் பாண்டியன் தற்கொலை செய்து கொள்வார் என மிரட்டுகிறார்.
ஒருகட்டத்தில் தன் வாழ்க்கையை விட அப்பாவின் மரியாதையை காப்பாற்ற நினைத்த அரசி அங்கு இவரை மிரட்ட குமரவேல் வைத்திருந்த தாலியை தானாக கட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே இருந்து இறங்க எல்லாரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.
என்ன நடந்தது எனக் கேட்க இவர் சொன்னது எல்லாமே உண்மை தான். ஆனால் அவர் ஒரு பக்க கதையை மட்டுமே சொல்லி இருக்கார். தன்னுடைய தாலியை வெளியில் எடுத்து போட குமரவேல் முதற்கொண்டு எல்லாரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர்.
என்னை பார்க்க வர சொன்னது இவர்தான். நான் இல்லாமல் வாழ முடியாது என குமரவேல் சொன்னதால் இந்த கல்யாணம் நடந்ததாக சொல்ல குமார் பதறி போய் பார்த்து கொண்டு இருக்கிறார். உமையாளிடம் என்னை மன்னிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
அவர் இதற்கு உன்னை எப்படி மன்னிக்க முடியும். நீ செஞ்சது சின்ன விஷயமா என்கிறார். அரசி எல்லாரிடமும் பேச முயற்சி செய்ய கோமதி கோபத்தில் அடித்து விடுகிறார். மயிலின் அம்மா இந்த களவாணி குடும்பத்துல ஏன்மா கல்யாணம் செஞ்சிக்கிட்ட என்கிறார்.
இதில் கடுப்பான சக்திவேல் நீங்கதான் திருட்டு குடும்பம் என சத்தம் போட நாங்க என்ன திருடுனோம் எனக் கேட்க அன்னைக்கு கொள்ளையில் செஞ்சதை சொல்ல மயில் அப்பா தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க என்கிறார். எல்லாம் சரியாதான் இருக்கோம் என சக்திவேல் திட்டுகிறார்.
இதில் கடுப்பான மீனா சத்தம் போட அவரை அப்பா, அம்மா அடக்குகிறார். மயிலின் அம்மா இவ கூட பேசுறா. இந்த மயிலு ஏன் அமைதியா இருக்கா என்கிறார். உமையாள் உங்க குடும்பம் நல்லாவே இருக்காது என சாபம் விட்டு செல்கிறார்.
இதில் பாண்டியன் தடுமாறி போக பார்க்க அரசி அவர் காலை பிடித்துக்கொண்டு அழுதுக்கொண்டு இருக்கிறார். வீட்டினரும் அழுதுக்கொண்டே இருக்கின்றனர்.
