Pandian stores2: சுகன்யாவின் திருட்டுத்தனத்தால் குமரவேலிடம் சிக்கிய அரசி… பாண்டியன் நிலை?

Published on: August 8, 2025
---Advertisement---

Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

கோமதி தன் மகளிடம் கல்யாணம் குறித்து பேசிவிட்டு அவரை சென்று படுக்க சொல்கிறார். சுகன்யா அரசியை யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியாக அழைத்து வந்து அனுப்பி விடுகிறார். அரசி குமரவேலை பார்க்க செல்கிறார்.

பழனி அப்போ யாரிடமோ பேசிக்கொண்டு இருக்க அவரை பேசி வேறுபக்கம் அனுப்பி விடுகிறார். குமரவேல் சுகன்யாவிற்கு கால் செய்ய உன்னை பார்க்க தான் அரசி வர அவளை சீக்கிரம் பேசி வச்சிட்டு அனுப்பிடு என்கிறார்.

குமரவேலை பார்க்கும் அரசி என்னை மன்னிச்சிடுங்க. நான் காதலிச்சது தப்புதான். கல்யாணம் பண்ணிக்க நினைச்சதும் தப்புதான் என்கிறார். மன்னிப்பு கேளு எனக் கூற அரசியும் மன்னிச்சிடுங்க எனக் கெஞ்ச குமரவேல் நான் இப்போ கிளம்பலாமா எனக் கேட்கிறார்.

வீட்டில் சுகன்யா அரசிக்காக காத்திருக்கிறார். போன் பண்ணி பார்க்க அரசி போன் வீட்டில் அடிக்கிறது. குமரவேலிடம் நீங்க ஏமாத்தலாம். நான் உண்மையா தான் இருந்தேன். மன்னிப்பும் கேட்டுவிட்டேன் என்கிறார். அரசியை பார்த்து சிரிக்கும் குமரவேல் உன்னை அனுப்பவா அழைச்சேன்.

நீ வந்து மாட்டிக்கிட்ட என்கிறார். அரசி குமரவேலிடம் இருந்து தப்பித்து ஓட குமரவேலுவின் நண்பர்கள் என தெரியாமல் சிலரிடம் மாட்டிக்கொள்கிறார் அரசி. குமரவேல் அரசியை கடத்தி செல்கிறார்.

வீட்டில் சுகன்யா பதட்டமாக அமர்ந்து இருக்க கோமதி என்ன அரசி தூங்கிட்டாளா எனக் கேட்க அதெல்லாம் அவ தூங்கிட்டா. நீங்களும் போய் தூங்குங்க என்கிறார். மீனா மற்றும் ராஜி வந்து காலையில் எந்திரிப்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

சுகன்யா குமரவேலிடம் மானசீகமாக தயவு செஞ்சி அனுப்பி வச்சிரு. இல்ல நான் உன்னுடன் அனுப்பியது போல ஆகிடும் என பதட்டப்படுகிறார். காலையில் எல்லாரும் எழுந்து வேலைகளை செய்துக்கொண்டு இருக்க கோமதி மற்றும் மீனா பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment