சன் டிவி சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் சூப்பர் அப்டேட்கள்…

by ராம் சுதன் |

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ அப்டேட்கள் குறித்த தொகுப்புகள்.

கயல்

கயல் சாமியிடம் அடுத்த வருடம் இதே நாளில் வந்து என்னுடைய சபதத்தை நிறைவேற்றுவேன் என சொல்லிவிட்டு செல்கிறார். சிவசங்கரி அரசியல்வாதிக்கு கால் செய்து உங்க பொண்ணு இதே மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தா, நான் என் பையனுக்கு வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருவேன் என்கிறார்.

வீட்டிற்கு வரும் எழிலிடம் சிவசங்கரி ஆறுதலாக பேசி செல்ல, அவர் கோபமாக பேசுகிறார். ஏன் கோபமா பேசுற எனக் கேட்க போதும் என்னிடம் நடிக்க வேண்டாம் என கத்துகிறார்.

மருமகள்

வேல்விழியின் அப்பா பிரபு மற்றும் ஆதிரையை விருந்துக்கு அழைத்திருக்கிறார். ஆதிரையிடம் பிரபு இவர் அவ்வளவு நல்லவர் எல்லாம் கிடையாது. நம்மை விருந்துக்கு அழைத்து சாப்பாட்டில் விஷத்தை கலந்துருவாரோ என பயமுறுத்துகிறார்.

வேல்விழியிடம் அவர் அப்பா என்னோட குடுமி இப்போ அவன் கையில், அவன் கையெழுத்து போடாமல் விட்டால் நம் தலையெழுத்தே மாறிடும் என்கிறார்.. ஆதிரை பிரபுவிடம் உங்க சித்தி உங்கள பெத்த பையனா தான் பார்க்கிறாங்க. அவங்க பார்த்து பார்த்து தான் சமைச்சி இருப்பாங்க பயப்படாம சாப்பிடுங்க என்கிறார்.

சிங்கப் பெண்ணே

ஆனந்தியிடம் பேசும் மகேஷ் அன்பு காதல் என்னாகும் நினைச்சுட்டு இருக்க, கவலைப்படாத. அவன் லவ் ரொம்ப ஸ்ட்ராங். தோற்கவே தோக்காது என்கிறார். மகேஷ் கருணாகரனிடம் ஆர்டர் எடுத்தாச்சு. பிரச்சனை மட்டும் பண்றவங்க இங்க இருக்க வேண்டாம் என்கிறார்.

ஆனந்தியின் அப்பா ஆனந்திக்கு கால் செய்து மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு விஷயம் மட்டும் சொன்னாங்க என்கிறார். அவர் என்னவென்று கேட்க அவர் சில விஷயங்களை கூறிக் கொண்டிருக்கிறார்.

மூன்று முடிச்சு

சூர்யா மற்றும் நந்தினி காய்கறி கூடையுடன் ஆட்டோவில் இருந்து இறங்குகின்றனர். நந்தினி சூர்யாவிடம் இது உங்க வேலை தானா என்று கேட்க பிராமிஸா எனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது உன்னோட லக்ல கிடைச்சது என்கிறார். சுரேகா மாதவியிடம் நீ வேணா பாரு, இது என் வீடு நானும் என் பொண்டாட்டியும் இருக்கோம். நீங்க எல்லாம் வெளியில போங்கன்னு சொல்ல போறான். அப்போ நாம என்ன பண்ணுவோம் என கேட்கிறார். நந்தினி கல்யாணத்திடம் திடீர்னு காய்கறி கடையை பார்த்தவுடன் ஜாலி ஆகிட்டாரு எனக் கூற அதை சுந்தரவல்லி எல்லாத்தையும் தூக்கி விசிறி அடிக்கிறார்.

Next Story