CWC Shabana: குக் வித் கோமாளியில் தற்போது பிரபலமாகி இருப்பவர் ஷபானா. இவர் குறித்து சன் டிவி நடிகை பேசி இருக்கும் விஷயம் வைரலாக பரவி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திரைப்படம் செம்பருத்தி. இதில் கிராமத்து பெண்ணாக அடக்கமான கேரக்டரில் ஷபானா நடித்திருப்பார். அதை தொடர்ந்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்தவர் தற்போது குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

பொதுவாக சின்னத்திரையில் ஹீரோயின்களுக்கு நட்பு இருப்பதே அரிதுதான். அப்படி ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா, ரேஷ்மா உள்ளிட்டோர் நட்பாக பழகி வந்தனர். அடிக்கடி இவர்களின் போட்டோஷூட் வேறு வைரலாகி வந்தது.

இதில் சைத்ராவின் திருமணத்தில் கூட அவருக்கு பெண் தோழிகளாக மூவரும் நின்றது பலருக்கும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. நால்வரும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த நட்புக் கூட்டம் மீண்டும் இணைந்து போட்டோஷூட் வெளியிட்டு வருகிறது.

ஆனால் இதில் ஷபானாவை தவிர மற்ற மூவரும் இருக்கின்றனர். ரசிகர்கள் ஏன் நீங்க முணு பேரும் மட்டும் இருக்கீங்க. ஷபானா எங்கே எனவும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதுகுறித்து அப்போது யாரும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஷபானா இந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார். யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த போது எனக்கும், நட்சத்திராவுக்கும் நட்பு பிறந்தது. எங்கள் இருவருக்குமே சண்டை என்பது வந்ததே இல்லை. வாக்குவாதம் கூட நாங்க செய்தது இல்லை.

இதை தொடர்ந்தே ரேஷ்மா மற்றும் ஷபானாவுடன் எங்களுக்கு நட்பு உருவானது. ஆனால் தற்போது ஷபானாவுடன் பேசுவது இல்லை. அதற்கு உண்டான காரணம் சொல்ல வேண்டியது இல்லை. இது எல்லாருக்குமே வருவது போல தான்.

கருத்துவேறுப்பாடு இருக்கிறது. விரைவில் அது சரியாகிவிடும். எல்லா நட்புக்களுக்குமே இதை போன்ற சண்டை வருவது சகஜம் தான். விரைவில் இந்த விஷயம் சரியாகி விடும். கூடிய சீக்கிரத்தில் நாங்க ஒன்றாக சேர்ந்து விடுவோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஷபானா திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய தோழிகளை ஒதுக்கி வைத்து இருப்பதற்கு காரணம் அவர் கணவர் ஆர்யன் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷபானா இதுவரை எந்த வார்த்தையும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *