கை விட்ட கமல்!... தத்தளிக்கும் விஜய் டிவி!.. தடுமாறும் பிக்பாஸ்!.. என்ன ஆகப்போகுதோ!..

by ராம் சுதன் |

தமிழ் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி எனில் அது பிக்பாஸ்தான். ஏனெனில், டிவியில் பெரும்பாலும் பெண்கள் சீரியல் பார்ப்பார்கள். ஆண்கள் சினிமா பாடல்களையோ அல்லது படங்களை பார்ப்பார்கள். ஆனால், ஒரு நிகழ்ச்சியாக எல்லோரும் பார்த்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியைத்தான்.

10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள். 100 நாட்கள் யார் தாக்கு பிடிக்கிறாரோ, யார் பிக்பாஸ் சொல்லும் எல்லா டாஸ்குகளையும் நேர்மையாக விளையாடுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவிலிருந்து இது ஹிந்திக்கு போய் அதன்பின் தமிழுக்கு வந்தது.

அதன்பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழியிலும் இந்நிகழ்ச்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழை பொறுத்தவரை முதல் சீசன் முதல் கடைசியாக நடந்து முடிந்த 7வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசனே நடத்தினார். அதனால்தான் இந்நிகழ்ச்சி பலராலும் கவனிக்கப்பட்டது.

வார நாட்களில் இந்நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட கமல் வரும் வார இறுதி நாட்களில் பார்த்தார்கள். இந்நிலையில்தான் 8வது சீசனை நான் நடத்தப்போவதில்லை என அறிவித்திருக்கிறார் கமல், எனவே, அடுத்து யார் நடத்தப்போகிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

போட்டியாளர்களை அதட்டி, மிரட்டி தைரியமாக பேசவோ, அவர்களுக்கு அறிவுரை சொல்லவோ, மனித உறவுகளுக்கான புரிதலை சொல்லவே ஒரு அனுபவம் வாய்ந்தவர் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும். கமலுக்கு அது இருந்தது. ‘கமல் சார்’ என்கிற இமேஜதால்தான் போட்டியாளர்கள் அலப்பறை செய்யாமல் அவர் சொன்னதை கேட்டு நடந்தார்கள். அவரின் பேச்சுக்கு அடி பணிந்தார்கள்.

இப்போது கமல் இல்லையெனில் வேறு யாரை போடலாம்?.. யார் நடத்தினால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும்?.. யார் வந்தால் போட்டியாளர்கள் சொல்படி கேட்பார்கள்? என விஜய் டிவி யோசித்தால் அதற்கு பதிலே இல்லை என சொல்லப்படுகிறது. கமலை போல அனுபவம் கொண்ட, திறமை மிக்க, வயது முதிர்ந்த நடிகர் இங்கே யாருமே இல்லை.

சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி என பலரை யோசித்தாலும் அவர்களை போட்டியாளர்களாக வரும் சீனியர் நடிகர்கள் ஜூனியர் நடிகர்களாகவே பார்ப்பார்கள். அவர்கள் ஒன்றை சொன்னால் அதற்கு கட்டுப்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, என்ன செய்வது என்கிற கலக்கத்தில் இருக்கிறதாம் விஜய் டிவி.

இதில், சூர்யா மறுத்துவிட்டார். விஜய் சேதுபதி மட்டும் ‘யோசித்து சொல்கிறேன்’ என சொல்லி இருக்கிறாராம். கமல் தரப்போ சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை பரிந்துரை செய்திருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

Next Story