thalaivar

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்க ரஜினி அவரின் 173வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சுந்தர்.சி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். எனவே, சிபி சக்ரவர்த்தி, அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே. பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபி சக்ரவர்த்தியே இயக்குனர் என ரஜினி முடிவு செய்தார்.

அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ள சிபிக்கு ரஜினி எப்படி படம் கொடுத்தார் என கோலிவுட்டே ஆச்சர்யமாக பார்த்தது. இதை ஒரு மேடையிலேயே சொன்ன சிபி ‘இவனா ரஜினி படத்தை இயக்கப்போகிறான் என பலரும் பார்க்கிறார்கள். தலைவர் ரசிகனாக சொல்கிறேன்.. இந்த படம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்’ என சொன்னார்.

இந்நிலையில்தான், இந்த படத்தின் வேலைகள் தற்போது துவங்கியிருக்கிறது. படத்தின் முழுக்கதையையும் சிபி சக்ரவர்த்தி எழுதி முடித்துவிட்டார். முழுக்கதையையும் அவர் ராஜ்கமல் மகேந்திரன் கொடுப்பது உள்ளிட்ட சில புகைப்படங்கலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்து ‘ஆரம்பிக்கலாமா’ என பதிவிட்டிருக்கிறது.