தலைவரே முன்னணி பிரபலத்தை விடுறதா ஐடியா இல்லையோ… தலைவர்171ல் இந்த ஹிட் நடிகரா?

by Akhilan |
தலைவரே முன்னணி பிரபலத்தை விடுறதா ஐடியா இல்லையோ… தலைவர்171ல் இந்த ஹிட் நடிகரா?
X

Thalaivar171: ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர்171 படத்தின் தொடர் அப்டேட்கள் வெளியாகி இருக்கிறார். ஜெயிலர் படத்தினை போலவே இந்த படத்திலும் மல்ட்டி ஸ்டார்களை லோகியை வைத்து இறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் தலைவர்171. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. வேட்டையன் படத்தினை முடித்த கையோடு ரஜினிகாந்த் தலைவர்171 படத்தில் இணைய இருக்கிறார்.

இதையும் படிங்க: லியோவுக்கு ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ்!.. தலைவர் 171க்கு இந்த ஹாலிவுட் படமா?.. என்னய்யா லோகி என்ன ஆச்சு?..

இப்படத்தின் கதை ரஜினிகாந்தின் கேரியரில் வித்தியாசமானதாக அமையும் எனக் கூறப்படுகிறது. நெகட்டிவ் வேடத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. வாட்ச் கையோடு ரஜினிகாந்த் நின்று இருப்பார். இதனால் டைம் டிராவல் படமாகவோ இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மல்ட்டி ஸ்டார்கள் தான். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் ஆகியோர் நடித்திருப்பார்கள். அதுவே ஜெயிலர் படத்துக்கு பெரிய அளவில் ஹிட்டானது.

இதையும் படிங்க: லைகாவை அலற விட்ட அஜித் குமார்!.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை!.. பம்மிய தயாரிப்பு நிறுவனம்?..

இந்நிலையில், தலைவர்171 படத்தில் ரன்வீர் சிங்கை முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். இது உறுதியாகும் பட்சத்தில் தலைவர்171 படத்துக்கு பாலிவுட்டில் பெரிய ரீச் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story