More
Categories: Cinema News latest news

தலைவர்171 வில்லன் இந்த 80ஸ் ஹீரோவா? வித்தியாசமான காம்போவா இருக்கே! லோகி புது ப்ளான்!

Thalaivar171: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 171 திரைப்படத்தின்  நடிகர், நடிகைகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. வித்தியாச முயற்சியால் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தலைவர் 171. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். குறைந்த நாள் கால்ஷீட் கொடுத்து விட்டேன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து பல நாள் எதிர்பார்த்து இருந்த லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி தற்போது நிஜமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: பைக் மெக்கானிக் டூ மாஸ் நடிகர்!.. அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத அரிய தகவல்கள்!..

லோகேஷ் தன்னுடைய முதற்கட்ட வேலைகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார். இதனால் அதற்கு அடுத்த முக்கிய விஷயமாக நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக ரன்வீர் சிங் மற்றும் நடிகை ஷோபனாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

தற்போதைய தகவலின்படி 80களில் முன்னணி நடிகராக இருந்த மைக் மோகன் படத்தின் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை முக்கிய இடத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரத்து காரணம் இதுதான்… அதனால் தான் இவ்வளவு பிரச்னையும்… உண்மையை உடைத்த பிரபலம்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோல் செய்ய வைக்க முயற்சியும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே, ஜெயிலர் படத்தில் மல்டி ஸ்டார் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து வேட்டையன் படத்திலும் ராணா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். தற்போது தலைவர் 171 படத்திலும் இதே பாணி கையால இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts