ஒரே ஒரு படம் தான்.. தளபதி66 தயாரிப்பாளரை மிரள வைத்த சூர்யா.! ஃபாலோ செய்யும் தில் ராஜு.!

Published on: June 7, 2022
---Advertisement---

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் ரிலீஸாகி பேய் ஹிட் அடித்து வரும்  திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி என பலர் நடித்திருந்தனர். லோகேஷ் கநகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த விஷயம் அனைத்தும் நமக்கு தெரியும். இப்படத்தில் சூர்யா இறுதிக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று தந்தது. அந்த கடைசி மூன்று நிமிட காட்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டனர்.

விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கமலும் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது உறுதி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது தளபதி விஜய்யை வைத்து அவரது 66வது திரைப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – ரசிகர்களை ஏமாற்ற போகும் தளபதி66 படக்குழு.! விஜய் பிறந்தநாளில் யாரும் இதை எதிர்பார்க்கல…

தற்சமயம் சூர்யாவின் மார்க்கெட் அடுத்தடுத்த வெற்றிகளால் வளர்ந்து கொண்டே வருகிறது. மீண்டும் பழைய நிலைமைக்கு சூர்யா வருகிறார்.  இதனை பயன்படுத்தி தற்போது தமிழிலும் தனது முத்திரையை பதிக்க விஜயை தொடர்ந்து சூர்யாவின் கால்ஷீட்டை வாங்க தில் ராஜு போட்டி போட்டு வருகின்றாராம்.

சொல்ல முடியாது, இதுவரை இல்லாத அளவிற்கு விஜய்க்கு அதிக சம்பளம் கொடுத்து அவரது கால்ஷீட்டை பெற்றது போல் தற்போது சூர்யாவிற்கும் இதுவரை அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை கொடுத்து சூர்யாவின் கால்ஷீட்டை யும் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.