அஜித்தால் மட்டுமில்லை என்னாலும் முடியும்… கோட் படத்தில் சாதித்து காட்டிய விஜய்…

Published on: August 27, 2024
---Advertisement---

Ajith: பொதுவாக அஜித் ரசிகர்கள் அவரை பெருமைப்படுத்த சொல்லும் ஒரு விஷயத்தை விஜய் தன்னுடைய கோட் திரைப்படத்தில் செய்து ரசிகர்களை ஆச்சரியப்பட செய்திருக்கிறார். இது குறித்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே தங்களுக்கு தனித்திறமை உண்டு. விஜயின் நடனத்தை அஜித்தால் எங்குமே முந்திவிட முடியாது. அதுபோல அஜீத்தின் பைக் ரேஸ் மற்றும் சண்டைக் காட்சிகளில் கொடுக்கும் அர்ப்பணிப்பை விஜயை இதுவரை செய்ததில்லை.

இதையும் படிங்க: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?

சமீபத்தில் கூட விடாமுயற்சி திரைப்படத்தில் கார் ரேஸ் காட்சி ஒன்றில் டூப் போடாமல் அஜித் நடித்திருப்பார். அந்த காட்சியிலேயே அவருக்கு பெரிய விபத்து நடந்தும் கூட தொடர்ந்து தற்போது வரை பணியாற்றி வருகிறார். ஆனால் இது போன்ற ரிஸ்குகளை இதுவரை விஜய் எடுத்ததில்லை.

இந்நிலையில் கோட் திரைப்படத்தில் பெரும்பாலான எல்லா சண்டைக்காட்சிகளுக்குமே விஜய் டூப் போடாமல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த சண்டை காட்சி இயக்குனர் திலீப் சுப்புராயன் கூறும்போது, தெறி, ஜில்லா, வாரிசு படத்தை எடுத்து கோட் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

goat

இப்படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் நடந்துள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஏற்கனவே கஷ்டடி திரைப்படம் எனக்கு வந்தது. ஆனால் அப்படத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை. இதை தொடர்ந்து கோட் திரைப்படத்தில் இணைந்தேன். இப்படத்திற்காக 128 நாள் பணியாற்றினேன்.

இதையும் படிங்க: அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..

 ஏனெனில் அப்பா மகன் காட்சி என்பதால் இருவருக்கும் இரண்டு முறை எடுக்க வேண்டியதாக இருந்தது. அப்பொழுது அது பெரிய அளவிலான வேலையாக இருந்தாலும், தற்போது பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. படத்தை பார்த்த எல்லோருமே சண்டை காட்சிகள் மிஷன் இம்பாசிபிள், ஹாலிவுட் படம் போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், என்னுடைய எல்லா  படங்களிலும் டூப் பயன்படுத்துவது கிடையாது. அதுபோலவே இந்த திரைப்படத்திலும் விஜய் சார் தான் எல்லா காட்சிகளிலும் நடித்திருப்பார். அவருக்கு பதில் எந்த வித டூப் கலைஞர்களும் பயன்படுத்தவில்லை. படம் நிச்சயமாக விஜய் ரசிகர்களை கவரும் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் பயிற்சி வீடியோவைக் காண: https://x.com/Filmy_Life_/status/1828307279818695005

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.